[ Monday, 23 April 2012, 12:37.43 PM. ] |
அர்ஜென்டினாவில் நடந்த
புதைபொருள் ஆராய்ச்சியில் பிரமாண்ட எறும்பு தின்னி வகைகள், யானை போன்ற விலங்குகளின்
படிமங்கள் கிடைத்துள்ளன.
வழக்கொழிந்த விலங்குகள் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இந்த ஆராய்ச்சியில்
தெரியவரும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பியூனஸ் அயர்ஸ் அருகில் உள்ள மார்க்கோஸ் பாஸ் என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில் 1000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த படிமங்கள் அனைத்தும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். லா பல்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டேவிட் பியாசா தலைமையில் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இவை கண்டறியப்பட்டுள்ளது. இதில் பல அரிய மற்றும் வழக்கொழிந்த விலங்குகளின் படிமங்கள் ஏராளமாக உள்ளது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வில் இவை குறித்த விரிவான தகவல்கள் தெரியவரும் என்றும் தலைமை ஆராய்ச்சியாளர் டேவிட் பியாசா தெரிவித்துள்ளார். எறும்புத் தின்னிகள் போன்ற உருவ அமைப்பில் இருக்கும் கிளிப்டோடான், யானைகளின் மூதாதை விலங்காக கருதப்படும் மாஸ்டோடான் ஆகியவற்றின் படிமங்களும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தற்போதுள்ள விலங்குகள் உருவான விதம், வழக்கொழிந்த விலங்குகள் பற்றிய பல தகவல்கள் ஆராய்ச்சியில் தெரியவரும் என்று நம்புகிறோம் என்றும் கூறினார். manithan.com thanks |
திங்கள், 23 ஏப்ரல், 2012
யானைகளின் மூதாதைகளின் படிமங்கள் கண்டுபிடிப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ᐈ Casino Poker - PlayOJO Casino
பதிலளிநீக்குTry Casino 스포츠라이브스코어 Poker for real money 스포츠 무료중계 and win huge bonuses. Get 안전한 사이트 more than 2 million cash 메가 슬롯 wins at Casino Poker. Claim your welcome bonuses now! 카라 포커