வெள்ளி, 21 டிசம்பர், 2012

உலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள்


லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் Beluga

லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் வெண்திமிங்கலம்
வடதுருவப்பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு வகைபாலூட்டி.

இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் (16அடி) நீளம் வரை வளரக்கூடியது. அனைத்து வகையான கடல் பன்றிகளை (டால்பின்) விடப் பெரியதாகவும் (மிகப்பெரிய டால்பின்வகைகளை அல்ல) அனைத்து வகையான பற்கொள் கொண்ட திமிங்கிலங்களை விட சிறியதாக தோற்றம் கொண்டது. பெண்பால் வகையை விட ஆண் வகைகள் பெரியதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1360 கிலோ வரையும் பெண் 900 கிலோ வரை எடை கொண்டது.பிறந்த உடன் 1.5 மீட்டர்(5 அடி) நீளமும் 80 கிலோ எடையும் இருக்கும். பொதுவாக பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் இருக்கும்.

அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை


காட்டுப்பூக்களைப் போலவே அழகிய வண்ணத்தில் இருப்பதால் கடல் தாமரைகள் என அழைக்கப்படும் இந்த உயிரினத்தை ஆங்கிலத்தில் 'சீ அனிமோன்' என்கிறார்கள்.


''ஆக்டினாய்டியா என்பது இதன் விலங்கியல் பெயர். அரை செ.மீ முதல் 6 அடி வரை அழகிய ஆரங்கள் கொண்ட வட்ட வடிவத்தில் அழகான தோற்றம் உடையவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இருந்தாலும் இந்த உயிரினம் தனது வாழ்நாள் முழுவதும் கடலுக்குள் ஒரே இடத்திலேயே பட்டா போட்டுக் கொண்டு உயிர் வாழ்கின்றன. கால்களே இல்லாத இந்த உயிரினங்கள் ஆபத்து என்று தெரிந்தால் மட்டுமே ஒரு மிதவையைப் போல் மிதந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்று அமர்ந்து கொள்கின்றன

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

முதலையை விழுங்கும் மலை பாம்பு : அதிர்ச்சி காணொளி!!


[ 00:11:08 20-11-2011 ]
முதலையை விழுங்கும் மலை
சேற்றுநிலத்துக்குள் உலாவந்த முதலையை அங்கு வந்த மலைப்பாம்பு ஒன்று மடக்கிப்பிடித்து உயிருடன் விழுங்கும் வியக்கவைக்கும் காணொளியேஇது. முற்களும் பற்களும் ஆயுதம் என ஆட்களையே மிரட்டும் முதலையை கூட விட்டுவைக்காத இந்த ராட்சத மலைப்பாம்புகளுக்கு மனிதர்களை விழுங்குவதும் சர்வசாதாரணம் போலும். முதலையை முழுசாக விழுங்கும் கொடுர காட்சிகளை நீங்களும் பாருங்கள்.
-

viyapu thanks