வெள்ளி, 21 டிசம்பர், 2012

உலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள்


லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் Beluga

லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் வெண்திமிங்கலம்
வடதுருவப்பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு வகைபாலூட்டி.

இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் (16அடி) நீளம் வரை வளரக்கூடியது. அனைத்து வகையான கடல் பன்றிகளை (டால்பின்) விடப் பெரியதாகவும் (மிகப்பெரிய டால்பின்வகைகளை அல்ல) அனைத்து வகையான பற்கொள் கொண்ட திமிங்கிலங்களை விட சிறியதாக தோற்றம் கொண்டது. பெண்பால் வகையை விட ஆண் வகைகள் பெரியதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1360 கிலோ வரையும் பெண் 900 கிலோ வரை எடை கொண்டது.பிறந்த உடன் 1.5 மீட்டர்(5 அடி) நீளமும் 80 கிலோ எடையும் இருக்கும். பொதுவாக பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் இருக்கும்.

Sarus Crane சாரசு கொக்கு
சாரசு கொக்கு என்பது இந்தியாவில்நடுப்பகுதியிலும் கங்கையாற்றுப்படுகையிலும் வட பாக்கித்தான் நேபாளம் தென்கிழக்கு ஆசியா ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படும் ஒரு வகைப் பெரியகொக்கு. இது 5 அடி உயரம் வரை இருக்கும்

நன்கு வளர்ந்த சாரசு கொக்குகள் சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். அலகுகள் கருத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்பாகவும் உடல் வெண்சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒத்த தோற்றம் கொண்டன. ஆண் பறவை பெட்டையை விடப் பெரியது. ஆண் பறவைகள் அதிக அளவாக 6.6 அடி உயரம் வரை வளரக்கூடும். இப்பறவையே உலகில் எஞ்சியுள்ள இனங்களில் உயரமான பறக்கும் பறவை ஆகும். சராசரியாக 6.3 முதல் 7.3 கிலோ எடை வரை இருக்கும்

மற்ற கொக்குகளைப் போல் இவை நெடுந்தொலைவு வலசைபோவதில்லை. இரண்டு முதல் ஐந்து கொக்குகள் வரை கொண்ட சிறிய குழுக்களாக (சிறு தொழுதிகளாக) வாழ்கின்றன. சாரசுகள்அனைத்துண்ணிகள். பூச்சிகள் நீர்த்தாவரங்கள் முதலானவற்றை உணவாகக் கொள்கின்றன. இப்பறவை தரையிலேயே கூடு கட்டுகிறது. இக்கொக்கு இரண்டு அல்லது மூன்றுமுட்டைகள் இடும். ஆண்இ பெண் (பெட்டை) இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும். இப்பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன.

(Rhincodon typus) திமிங்கிலச் சுறாமீன்
திமிங்கிலச் சுறாமீன் என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும். இச் சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கின்றன.நிலநடுக்கோட்டிலிருந்து சுமார் ±30° பகுதிகளில் வாழ்கின்றன. சுமார் 700 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன.



இச் சுறாமீன்கள் சுமார் 18 மீட்டர் (60 அடிகள்) நீளமும் சுமார் 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை. இவை தனியாகவே வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 2.6 டன் எடை உணவு உட்கொள்ளும். சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மீன் இனம் என்பர்.


சராசரி மனிதனுடன் திமிங்கிலச்சுறா மீனின் அளவு ஒப்பீடு

நீலமஞ்சள் பெருங்கிளி
நீலமஞ்சள் பெருங்கிளி அல்லது மக்காவ் என்பது கிளிக்குடும்பத்தைச் சேர்ந்த மக்காவ் என்னும் பெருங்கிளி வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவைகள் தென்னமெரிக்கக் காடுகளில் காணப்படுகின்றன.

இப்பெருங்கிளி 76 முதல் 83 செ.மீ நீளமும் 900 முதல் 1300 கிராம் எடை வரையும் வளரக்கூடியது. இப்பறவை பார்ப்பதற்கு அழகாக நீல இறக்கை வாலுடனும் கருநீல கன்னமும் உடலின் அடிப்பகுதி பொன்மஞ்சளாகவும் இருக்கும். இதன் நெற்றி பச்சைநிறத்திலும் அலகு கருப்பாகவும் இருக்கும். கடினமான கொட்டைகளை உடைத்துத் தின்ன ஏதுவாக இப்பறவை உறுதியான அலகினைப் பெற்றுள்ளது.

இப்பறவைகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் ஓரிணையுடன் வாழ்கின்றன. மரப்பொந்துகளில் கூடுகட்டி வாழ்கின்றன. பெண் கிளியானது இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் வரை இடும். 28 நாட்கள் அம்முட்டைகளை அடைகாக்கும்.

இப்பறவைகள் இவற்றின் அழகான தோற்றத்திற்காகவும் இவற்றின் பேசும் திறனுக்காகவும் மக்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக