திங்கள், 23 ஏப்ரல், 2012

உலகின் மிக அசிங்கமான பறவை


உலகின் மிக அசிங்கமான பறவை
[ Tuesday, 17 April 2012, 03:37.25 PM. ]
பிறந்த உடனே இறக்கைகள் ஏதும் இல்லாமல் வினோதமாக தோற்றமளித்ததால் நெல்சன் என்ற இந்த பறவை தனது பெற்றோர்களால் கைவிடப்பட்டது. ஜேர்மனியில் உள்ள Bergzooவில் நெல்சன் கடந்த மாதம் பிறந்தது.
பிறந்த உடனேயே இதன் பெற்றோரால் நிராகரிக்கப்பட்டதால் நான்கு வாரங்கள் Incubator-ல் வைத்து பராமரிக்கப்பட்டது.
இருப்பினும் தனக்கு என்றாவது ஒருநாள் இறக்கை முளைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பறவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.



manithan.com thanks

சிங்கங்களி​ன் ஆணவத்தை அடக்கிய எருமைகள்


[ Thursday, 19 April 2012, 06:56.53 AM. ]
கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்த எருமைகள் கூட்டத்திற்கு நுளைந்து அவற்றை வேட்டையாடத் தயாரான பெண் சிங்கங்களின் கூட்டம் ஒன்றை ஒன்றுபட்ட எருமைகள் ஓட ஓட விரட்டியடித்து அவற்றின் ஆணவத்தை அடக்கியுள்ளன. இவ்வினோத சம்பவமானது போட்ஸ்வனாவிலுள்ள டுபா தீவில் இடம்பெற்றுள்ளது.
சிங்கங்களில் பெண் சிங்கங்களே வேட்டைக்கு செல்லும் சோம்பேறிகளான ஆண்சிங்கங்கள் தமது குட்டிகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பெண்சிங்கத்தினால் வேட்டையாடிக் கொண்டுவரப்படும் உணவை உண்ணும் என்பது குிறிப்பிடத்தக்கது.

கடற்பறவையி​ன் கொடூரமான கொலை முயற்சி


[ Monday, 23 April 2012, 05:22.16 AM. ]
உணவுக் கூம்பகத்திற்கு அமைய எந்தவொரு உயிரினமும் பிற உயிரினத்திற்கு இரையாகின்றமை இயற்கையின் நியதியே. அதற்காக கொடூரமான முறையிலா இரையாக்குவது? கடற்கரையில் உல்லாசமாக உணவுதேடிக்கொண்டிருந்த தாராக்கள் கூட்டத்தின் உள்ளே புகுந்த கடற்பறவை ஒன்று அழகிய தாராக் குஞ்சு ஒன்றை தனக்கு இரையாக காவிச் சென்றுவிட்டது. இச்சம்பவமானது கடற்பறவைகள் அதிகளவில் காணப்படும் ஐரோப்பியாவில் இடம்பெற்றுள்ளது.

manithan.com  thanks

யானைகளின் மூதாதைகளின் படிமங்கள் கண்டுபிடிப்பு


[ Monday, 23 April 2012, 12:37.43 PM. ]
அர்ஜென்டினாவில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியில் பிரமாண்ட எறும்பு தின்னி வகைகள், யானை போன்ற விலங்குகளின் படிமங்கள் கிடைத்துள்ளன. வழக்கொழிந்த விலங்குகள் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இந்த ஆராய்ச்சியில் தெரியவரும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியில் உள்ள சுரங்கங்களில் அகழ்வாராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 300க்கும் அதிகமான விலங்குகளின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்துமே வரலாற்று காலத்துக்கு முந்தையதாக இருக்கலாம் என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பியூனஸ் அயர்ஸ் அருகில் உள்ள மார்க்கோஸ் பாஸ் என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில் 1000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த படிமங்கள் அனைத்தும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லா பல்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டேவிட் பியாசா தலைமையில் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இவை கண்டறியப்பட்டுள்ளது. இதில் பல அரிய மற்றும் வழக்கொழிந்த விலங்குகளின் படிமங்கள் ஏராளமாக உள்ளது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வில் இவை குறித்த விரிவான தகவல்கள் தெரியவரும் என்றும் தலைமை ஆராய்ச்சியாளர் டேவிட் பியாசா தெரிவித்துள்ளார்.
எறும்புத் தின்னிகள் போன்ற உருவ அமைப்பில் இருக்கும் கிளிப்டோடான், யானைகளின் மூதாதை விலங்காக கருதப்படும் மாஸ்டோடான் ஆகியவற்றின் படிமங்களும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தற்போதுள்ள விலங்குகள் உருவான விதம், வழக்கொழிந்த விலங்குகள் பற்றிய பல தகவல்கள் ஆராய்ச்சியில் தெரியவரும் என்று நம்புகிறோம் என்றும் கூறினார்.


manithan.com thanks

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

உலகில் அழிந்து வரும் விலங்குகள் தொகுப்பு-02


உலகில் அழிந்து வரும் விலங்குகள் தொகுப்பு-02

எனது முந்தைய பதிவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

மனிதன் தோன்றுவதற்கு முன்னேயே தோன்றிய மிருகங்கள் அழிந்து வருகிறது என்றால் அடுத்து அழியப்போவது மனிதர்கள்தான்...
மிருகங்களை அழித்து வருவதன் மூலம் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முற்படுகிறான் என்றுதான் கொள்ள வேண்டும்..

இன்றைய உலகில் மனிதனின் உணவுத்தேவைக்காகவும் வேறு சில தேவைக்காகவும் நாள்தோறும் விலங்குகள் வேட்டை ஆடப்படுகிறது. இதனால் சில விலங்குகள் அழியும் தறுவாய் மிக விரைவில் அவைகளில் சில விலங்குகள் ....

பனிக்கரடி polar bear
பனிக்கரடி (துருவக் கரடி) நில உருண்டையின் கடும் உறைபனி சூழ்ந்தஆர்க்டிக் பகுதியில் காணப்படும் இவை ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் வாழும்வெண்ணிறக்கரடி இனமாகும்.

இது இறைச்சி உண்ணும் ஊனுண்ணிப்பாலூட்டி. இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்லது. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம்எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் (வசந்த) காலத்தில் கருத்தரிக்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும்.பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. உலகில் ஏறத்தாழ 20000 பனிக் கரடிகள் உள்ளதாகக் கணக்கெடுகப்பட்டுள்ளது.

நீர்யானைகள்
நீர்யானைகள் ஆபிரிக்காவைச் சேர்ந்த பாலூட்டியாகும். இது ஒரு தாவர உண்ணிஆகும். கூட்டங்களாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். இவை 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவை 3.5 மீட்டர் நீளமானவை; 1.5 மீட்டர் தோளுயரமுடையவை; 1500 முதல் 3200கிலோகிராம் நிறையுடையவை. பெண் நீர் யானைகள் ஆண்களைவிட சிறியவை.

நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால் அவற்றின் ஆள்புலத்தினுள் நுழைவோரை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை. நீர்யானைக் குட்டிகள் நீரினுள்ளேயே பிறப்பதால் தம் முதல் மூச்சுக்காகவே நீந்தி நீர்மட்டத்திற்கு வருகின்றன. நீருக்கடியிலேயே முலைப்பால் அருந்துகின்றன

(Babyrousa celebensis) சுலவேசி நாற்கொம்புப் பன்றி

சுலவேசி நாற்கொம்புப் பன்றி நான்கு கொம்புள்ள பேபிரூசா செலெபென்சிசு என்னும் அறிவியற் பெயர் கொண்ட சுலவேசி நாற்கொம்புப் பன்றி இனம்இந்தோனீசியத் தீவுகளில் வடக்குசுலவேசியையும் அருகே உள்ள லெம்பேத் தீவுகளையும் இயற்கை வாழிடமாகக் கொண்டுள்ள ஓரினம். நான்கு கொம்புகள் உள்ள விலங்கு என்று கூறினாலும் அவற்றுள் இரண்டு கொம்புகள் இவ்விலங்கின் கீழ்த்தாடையின் நாய்ப்பற்கள் அல்லது புலிப்பற்கள் ஆகும். இதனை எயிறு என்றும் கூறுவர்




(Cheetah) சிவிங்கிப்புலி

சிவிங்கிப்புலி பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்தபாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 105 கிமீ (65 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும். ஓடும் போது வெறும் மூன்று நொடிகளில் 110 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும்

இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ்வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிகி எடையும் 112 முதல் 135 செமீ நீளமான உடலும் 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும்.

பெண் சிவிங்கிப்புலிகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் சிவிங்கிப்புலிகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிவிங்கிப்புலியின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளனசிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது

நாற்கொம்பு மான் Tetracerus

நாற்கொம்பு மான் தெற்காசியாவின் திறந்தவெளிக்காடுகளில் வாழும் ஒரு மானினமாகும். இது இந்தியாவில் கங்கை நதியின் தெற்கிலிருந்து தமிழ் நாடு வரையிலும் ஒரிசா மாநிலத்திற்கு மேற்கிலிருந்துகுசராத்தின் கீர் காடுகள் வரை வாழ்கின்றது. மேலும் இவ்வினத்தின் ஓரு சிறிய உயிர்த்தொகை நேப்பாளத்திலும்வாழ்கின்றது.வளர்ந்த விலங்கு 55-60 செ.மீ உயரமும் 20 - 22 கிலோ எடையும் கொண்டிருக்கும்.

பெண் விலங்குகளுக்கு கொம்புகள் இராது. ஆண்களுக்கு நான்கு கொம்புகள் இருக்கும். இதில் பின்புறம் உள்ள இரண்டு கொம்புகள் பிறந்த சில மாதங்களிலேயே முளைக்கத் தொடங்கிவிடும். முன்புறம் உள்ள கொம்புகள் பிறந்ததிலிருந்து 14-15 மாதங்களுக்குப் பின் முளைக்க ஆரம்பிக்கும்.இம் மான் இன்னமும் பரவலாக காணப்பட்டாலும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தற்பொழுது 1000 முதல் 10000 வரை இருக்கலாம் என கருதப்படுகின்றது.

டிங்கோ நாய்

டிங்கோ நாய் ஆஸ்திரேலியாவில் உள்ள பழக்கப்படுத்தபடாத காட்டுநாய் டிங்கோ என்னும் நாய்.
இதன் எடை 10 முதல் 24 கிகி இருக்கும்; உயரம் ஏறத்தாழ 44 செ.மீ முதல் 63 செ.மீ வரை இருக்கும்; உடல் நீளம் 86 முதல் 122 செ.மீ இருக்கும். பெரும்பாலும் இவை குரைப்பதில்லை (குலைப்பதில்லை). மரத்திலும் ஏறவல்லவை.ஆண்டிற்கு ஒருமுறைதான் இனப்பெருக்கம் செய்கின்றன


உலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள்


லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் Beluga
லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் வெண்திமிங்கலம்
வடதுருவப்பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு வகைபாலூட்டி.

இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் (16அடி) நீளம் வரை வளரக்கூடியது. அனைத்து வகையான கடல் பன்றிகளை (டால்பின்) விடப் பெரியதாகவும் (மிகப்பெரிய டால்பின்வகைகளை அல்ல) அனைத்து வகையான பற்கொள் கொண்ட திமிங்கிலங்களை விட சிறியதாக தோற்றம் கொண்டது. பெண்பால் வகையை விடஆண் வகைகள் பெரியதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1360 கிலோ வரையும் பெண் 900 கிலோ வரை எடை கொண்டது.பிறந்த உடன் 1.5 மீட்டர்(5 அடி) நீளமும் 80 கிலோ எடையும் இருக்கும். பொதுவாக பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் இருக்கும்.

Sarus Crane சாரசு கொக்கு

சாரசு கொக்கு என்பது இந்தியாவில்நடுப்பகுதியிலும் கங்கையாற்றுப்படுகையிலும் வட பாக்கித்தான் நேபாளம் தென்கிழக்கு ஆசியா ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படும் ஒரு வகைப் பெரியகொக்கு. இது 5 அடி உயரம் வரை இருக்கும்

நன்கு வளர்ந்த சாரசு கொக்குகள் சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். அலகுகள் கருத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்பாகவும் உடல் வெண்சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒத்த தோற்றம் கொண்டன. ஆண் பறவை பெட்டையை விடப் பெரியது. ஆண் பறவைகள் அதிக அளவாக 6.6 அடி உயரம் வரை வளரக்கூடும்.இப்பறவையே உலகில் எஞ்சியுள்ள இனங்களில் உயரமான பறக்கும் பறவை ஆகும். சராசரியாக 6.3 முதல் 7.3 கிலோ எடை வரை இருக்கும்

மற்ற கொக்குகளைப் போல் இவை நெடுந்தொலைவு வலசைபோவதில்லை. இரண்டு முதல் ஐந்து கொக்குகள் வரை கொண்ட சிறிய குழுக்களாக (சிறு தொழுதிகளாக) வாழ்கின்றன. சாரசுகள்அனைத்துண்ணிகள். பூச்சிகள் நீர்த்தாவரங்கள் முதலானவற்றை உணவாகக் கொள்கின்றன. இப்பறவை தரையிலேயே கூடு கட்டுகிறது. இக்கொக்கு இரண்டு அல்லது மூன்றுமுட்டைகள் இடும். ஆண்இ பெண் (பெட்டை) இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும். இப்பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன.

(Rhincodon typus) திமிங்கிலச் சுறாமீன்

திமிங்கிலச் சுறாமீன் என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும். இச் சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கின்றன.நிலநடுக்கோட்டிலிருந்து சுமார் ±30° பகுதிகளில் வாழ்கின்றன. சுமார் 700 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன.




இச் சுறாமீன்கள் சுமார் 18 மீட்டர் (60 அடிகள்) நீளமும் சுமார் 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை. இவை தனியாகவே வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 2.6 டன் எடை உணவு உட்கொள்ளும். சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மீன் இனம் என்பர்.


சராசரி மனிதனுடன் திமிங்கிலச்சுறா மீனின் அளவு ஒப்பீடு

நீலமஞ்சள் பெருங்கிளி

நீலமஞ்சள் பெருங்கிளி அல்லது மக்காவ் என்பது கிளிக்குடும்பத்தைச் சேர்ந்த மக்காவ் என்னும் பெருங்கிளி வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவைகள் தென்னமெரிக்கக் காடுகளில் காணப்படுகின்றன.

இப்பெருங்கிளி 76 முதல் 83 செ.மீ நீளமும் 900 முதல் 1300 கிராம் எடை வரையும் வளரக்கூடியது. இப்பறவை பார்ப்பதற்கு அழகாக நீல இறக்கை வாலுடனும் கருநீல கன்னமும் உடலின் அடிப்பகுதி பொன்மஞ்சளாகவும் இருக்கும். இதன் நெற்றி பச்சைநிறத்திலும் அலகு கருப்பாகவும் இருக்கும். கடினமான கொட்டைகளை உடைத்துத் தின்ன ஏதுவாக இப்பறவை உறுதியான அலகினைப் பெற்றுள்ளது.

இப்பறவைகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் ஓரிணையுடன் வாழ்கின்றன.மரப்பொந்துகளில் கூடுகட்டி வாழ்கின்றன. பெண் கிளியானது இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் வரை இடும். 28 நாட்கள் அம்முட்டைகளை அடைகாக்கும்.

இப்பறவைகள் இவற்றின் அழகான தோற்றத்திற்காகவும் இவற்றின் பேசும் திறனுக்காகவும் மக்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.



ஆந்தைகளின் இராட்சியம்



ஆந்தைகள் ஒரு காலத்தில் நம் முன்னோர்களை ஆட்டிப்படைத்து தான் இருக்கிறது அதற்கான சான்றுகள் கீழே

இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல் பயத்துக்குரியதாகவும் கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது.

ஆந்தைகளின் புத்தி கூர்மைக்கு சான்றாக அத்தீனா தெய்வத்துடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு வந்தது.

அத்தீனா கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு தந்திரம் போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது.

பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் 'ம்' ஒலியைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்பட்டது. எனினும் ஊனுண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க அதன் கால்கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள். ஜப்பானியப் பண்பாட்டில் ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன் இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப்பட்டது. ஹோபி பண்பாட்டில் இவை அழுக்கானவையாகவும் கஷ்டத்தைக் கொண்டுவருபவையாகவும் கருதப்பட்டன

இனி ஆந்தைகள் பற்றிய சிறு கண்ணோட்டம்

ஆந்தை ஸ்ட்றைஜிபோர்மெஸ் ஐச் சேர்ந்த தனித்த இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள் பூச்சிகள் மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும்.

ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும் காதுகளையும் சொண்டையும் மற்றும் facial diskஎன அழைக்கப்படும் தெளிவாகத் தெரியும் கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது.


ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும் அவற்றின் கண்கள் அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது.


ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும் அவற்றின் பார்வை விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது.
பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial disk கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன

ஆந்தைகளின் வலுவான நகங்களும் கூரிய சொண்டும் உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும் மங்கலான இறகுகளும் அவை சத்தமின்றியும் காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் சமிக்கப்படமுடியாத எலும்புகள் செதில்கள் மற்றும் இறகுகள் போன்றவற்றை உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது

எது எவ்வாறு இருப்பினும் ஆந்தைகளுக்கும் அழகு உண்டு. எனக்கு பிடித்த ஆந்தைகளுன் அழகான சில படங்கள்


















உலகில் தாவர உணவுகளை மட்டுமே உண்ணும் பகீரா கிப்லிங்கி சிலந்தி


தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி வகை ஒன்று பற்றிய தகவல்களை அறிவியலாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.

பகீரா கிப்லிங்கி (Bagheera kiplingi)எனப்படும் இவ்வகை சிலந்திகள் நடு அமெரிக்காவிலும் மெக்சிக்கோவிலும் வாழ்ந்து வருகின்றன. இவையே சிலந்தி வகைகளில் தாவர உணவை மட்டும் உண்பவை. இவற்றைவிட ஏனைய இதுவரையில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 40000 சிலந்தி வகைகள அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும்.


இது குறித்த ஆய்வுக் கட்டுரை 'நடப்பு உயிரியல்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. க்கிய அமெரிக்காவில் பென்சில் வேனியாவின் விலனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கறி என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.



பாயும் சிலந்திதேள் வகுப்பு வகுப்பைச் சேர்ந்த இவை 5-6மிமீ நீளமானவை. புரதங்கள் நிறைந்த அக்காசியா வகைத் தாவரங்களின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்புகளை விலக்கியே வர வேண்டியிருக்கிறது.


இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக கொஸ்டா ரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் மீகன் என்பவரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது பேராசிரியர் கறியின் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ராபர்ட் கறி இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில் 'தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இதுவொன்றே'எனத் தெரிவித்தார்.

'இவை பாயும் சிலந்திகளாதலால் தமது உணவுக்காக வலைகளைப் பின்ன வேண்டியதில்லை. அவ்வப்போது எறும்புகளால் அக்கேசியா தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றன. அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன.'

'அக்காசியாக்கள் ஆண்டு முழுவதும் இலைகளைத் தருவதால் இச்சிலந்திகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை' இவ்வாறு தெரிவித்தார் பேராசிரியர் ராபர்ட் கறி.



கடலில் ஒரு சோக மீன்


குழந்தை கையில் காலில் சிக்கி தோலுடன் பிதுக்கிய வாழைப்பழம் போல கொழ கொழ என்று இருக்கும். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சோகமான மூஞ்சியுடன். Sad fish அல்லது Blob fish என்று ஆங்கிலத்தில் பெயர்.


சோக மீன் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா அருகில் ஆழமான கடலில் வசிக்கிறது. கொஞ்சமே தசைகள், எலும்புகள் கொண்டது. அதனால் மாம்பழ ஜெல்லோவை சேர்த்து செய்தது போல இருக்கும்.





கடல்நீரின் அடர்த்தியை விட இந்த சோக மீனின் உடம்பின் அடர்த்தி கம்மி. நூல்நூலாக இருக்கும் தாத்தா பூச்சி காற்றில் மிதக்கும் இல்லையா. அதுபோல சோக மீன் அடர்த்தி குறைவினால் கடலுக்கடியில் தரையில் படாமல் நீரில் தன்னாலேயே மிதக்கும். நீந்தவே வேண்டாம். மிதக்கையில் ஏதாவது சாப்பிட அகப்பட்டால் வாயை மட்டும் திறந்து லபக்.சோக மூஞ்சி சுக வாழ்க்கை






இன்று நாம் சோக மீனை தொடர்ந்து தூண்டில் வலை போட்டு நிறைய பிடித்துவிடுவதால் இந்த மீன் இனம் வேகமாக அருகி வருகிறதாம்.

சோக மீன் சோக வாழ்க்கை.



தவளைகள் பற்றிய அதிசய தகவல்கள்


தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரிசையாகும்.முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும் திரண்டு உருண்ட உடலும் விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும் புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும் கொண்டு வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு குட்டைகளிலும் குளங்களிலும் காணப்படுவன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன.




கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை. தென் அமெரிக்காவில் வாழ்கின்றது

தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன.









கூடு கட்டும் தவளை இனம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது


கூடு கட்டி அதன் மீது முட்டையிடும் ஒரு வகைதவளை இனமொன்றைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக இந்திய அறிவியலாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

இத்தவளைகள் முட்டையிட்டவுடன் அவற்றை வெப்பத்தில் இருந்தும் மற்றும் வேறு விலங்கினங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் கூடுகளைக் கட்டுகின்றன என்று தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் எஸ். டி. பிஜு என்பவர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய மாநிலங்களான கேரளம் மற்றும் கருநாடகம் ஆகியவற்றிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மழைக் காடுகளில் இவ் வகை தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கேரளாவின் வயநாடு மற்றும் கருநாடகத்தின் குடகு ஆகிய மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பலத்த ஆய்வின் பின்னர் இவை கண்டுபிடிக்கப்பட்டன.
12 செமீ (5 அங்) நீளமுள்ள இந்த சிறிய தவளைகள் இலைகளில் மேலிருந்து கீழே தவழ்ந்து சென்று பட்டுப்பூச்சிக் கூடு போன்ற கூடுகளை அமைக்கின்றன. அத்துடன் கூடுகளின் முனைகளை இறுக்கக் கட்டுவதற்காக ஒரு திரவப் பொருளை வெளிவிடுகின்றன.
'இவ்வகை மிகவும் அரிதான தவளைகள் ஆசியாவிலேயே முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன' என்று முனைவர் பிஜு பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில இலைகளில் கூடு கட்டும் தவளைகள் முட்டைகளை இடும் போதே கூடுகளைக் கட்ட ஆரம்பிக்கின்றன என்றும் கூடு கட்டும் வேலையில் ஆண் தவளைகளும் பெண் தவளைகளும் இணைந்தே பங்காற்றுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இந்த இந்தியத் தவளைகள் முட்டைகளை இட்ட பின்னரே கூடுகளைக் கட்ட ஆரம்பிக்கின்றன.

பளிச்சென்று தெரியும் சிவப்பு ஆரஞ்சு வண்ணத்தில் இந்தத் தவளை இருக்கிறது.ஆனைமுடி மலையுச்சியில் மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் குறைவான பகுதியிலேயே இந்தத் தவளை இனம் வாழ்கிறது.ஆயிரத்துத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த தவளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தத் தவளைக்கு ராவ்செஸ்டர்ஸ் ரெஸ்பிளெண்டென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதுடில்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.பிஜு தலைமையில் நான்கு பேர் கொண்ட அறிவியலாளர் குழு இந்தத் தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர். 
இந்தத் தவளைகளின் உடலின் மேற்பகுதியில் இருந்த சில சுரப்பிகளும் வீக்கங்களும் அவற்றை தேரையைப் போலக் காட்டியதாக அவர் கூறுகிறார்.
 

மரத்தில் வாழக்கூடிய தவளைகளில் இந்த இனத்துக்கு மட்டுமே இப்படியான சுரப்பிகள் இருக்கின்றன. பெரிது பெரிதாக இருக்கும் சுரப்பிகளின் பயன் புரியாத புதிராகவே உள்ளது.
2001 ஆம் ஆண்டு இந்த இனத்தை முதலில் தான் கண்டதாகவும் இது புதிய இனம்தான் என்பதை பல கோணங்களிலும் உறுதிப்படுத்த தனக்கு 7 ஆண்டுகள் ஆகியது என்றும் அவர் கூறுகிறார்.

மிகச்சிறிய ஒரு பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் இப்படியான ஒரு இனம் அழிவின் விளிம்பில் வாழ்ந்துவருவது அறிவியலாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உலகில் மொத்தத்தில்ஆறாயிரத்துக்கும் கூடுதலான தவளை இனங்கள் இருப்பதாக கண்டுதுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதியளவு ஏதோ ஒரு வகையில் அச்சுறுதல்லுக்கு உள்ளாகியுள்ளன.


பூகம்பத்தை முன்கூட்டியே தவளை அறியும் - விஞ்ஞானி தகவல்




இங்கிலாந்தில் மில்டன் கெய்னஸ் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானி ராஜெல் கிரான்ட் தவளைகள் நடவடிக்கை பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றார்.இவர் பூகம்பம் ஏற்பட போவது தவளைக்கு முன் கூட்டியே தெரிந்து விடுவதாக கண்டுபிடித்து உள்ளார்.

இத்தாலியில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது சான்ரா பினோவில் உள்ள ஏரியில் வாழும் தவளைகள் குறித்து ராஜெல் கிரான்ட் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
பூகம்பம் ஏற்படுவதற்கு 6 நாட்களுக்கு முன்பு அங்கிருந்த தவளைகள் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. 5 நாட்களுக்கு முன்பு 96 சதவீத ஆண் தவளைகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. 3 நாட்களுக்கு முன்பு அனைத்து தவளைகளும் வெளியேறி சென்று விட்டன. பின்னர் பூகம்பம் முடிந்து 6 நாட்களுக்கு பிறகு அதே ஏரிக்கு திரும்பி வந்துவிட்டன.இதைவைத்து பார்க்கும் போது தவளைகள் முன் கூட்டியே நில நடுக்கத்தை கண்டுபிடித்து விடுகின்றன என்று அவர் கூறுகிறார்.
அந்த தவளைகள் பூகம்பத்துக்கு பிறகு 6 நாட்கள் கழித்து திரும்பி வந்தன. இந்த 6 நாட்கள் வரையிலும் பூகம்பத்துக்கு பிறகு ஏற்படும் சிறிய அளவிலான அதிர்வுகள் இருந்து கொண்டிருந்தன. தவளைகள் திரும்பி வந்த பிறகு அதிர்வுகள் கூட நின்று விட்டன. எனவே தவளைகள் சிறிது அதிர்வையும் முன் கூட்டியே கண்டுபிடித்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



தேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள்

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன்பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.
இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை

தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.
1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ண் தேனீக்கள் (Drone)
3வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)



ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.

இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.



இராணித் தேனீ

இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது.
அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.

இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது.

ண் தேனீக்கள் (Drone)

ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.

நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன

இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.

வேலைக்காரத் தேனீக்கள்

மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.


தேனின் மருத்துவக் குணங்கள்



பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது


  • உடல் பருமனாக குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம்

  • உடல் பருமனைக் குறைக்க மிதமான வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை குறைக்கலாம்.

  • வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளிஇ இருமல் போன்றவை நீங்கும்.
தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.



வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்




கறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும் இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை அதற்குரியத்தொல்லுயிர் எச்சம் மற்றும் அம்பர்உறுதிசெய்கின்றன




கறையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை தேவையில்லாதகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட நு

ட்பங்களை நாம் அவசியம் அறிய வேண்டும்




கரையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவித மிதவை உந்து விசைகளை உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது.

அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன் கரியமில வாயு வெப்பம் நீராவி ஆகியன அடிப்பரப்புக் குழாய் வழியாக புற்றின் வெளிக்காற்றுடன் வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று மீண்டும் புற்றுக்குள் உள்ளீடற்ற குழாய் மற்றும் அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று புற்றினுள் சென்று புற்றின் உட்புறத்திற்க்குச் சென்றடைந்து புற்றின் உட்புற வெப்பத்தைத் தணித்து குளுமையாக மாற்றும்.இக்குளுமை எப்பொழுதும் நிலவுவதால் புற்றினுள் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக அமைய உதவுகிறது.


கறையான்கள் கூட்டமாக வாழும் இயல்புடைய ஒரு சமுதாய பூச்சி வகையாகும். இவை தனித்து வாழாமல் கூட்டமாக வாழும் இயல்புடையது. கறையான் கூட்டத்தில் 500 முதல் 500000 வரை கறையான்கள் இருக்கும். ஒரு கறையான் கூட்டத்திலுள்ள கறையான்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;



பெயர்வேலைகுறிப்பு
1.இராணிக்கறையான்கறையான்களை வழிநடத்துதல்குட்டி போடுதல்
2.ஆண்கறையான்இனக்கலவி புரிதல்எந்த வேலையும் செய்யாது
3.வாகைக்கறையான்பாதுகாப்புப் பணிகுருடு; மலடு; ஆண், பெண் உண்டு;
1-2ஆண்டு வாழும்.
4.பணிக்கறையான்உணவு கொடுத்தல், புற்றுக்கட்டுதல்குருடு; மலடு; ஆண், பெண் உண்டு; 1-2ஆண்டு வாழும்





மழைக்காலத்தில் வயது முதிர்ந்த கறையான்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது இயற்கை நியதி. எனவே அவை இறக்கை முளைத்து ஈசல்களாக வெளியில் வந்து கொஞ்ச நேரத்திலேயே இறக்கையை இழந்து ஒரே நாளில் உயிரை விட்டுவிடும். அதனால் கறையான்களின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்படுகிறது.



இராணிக்கறையான்


ஆண்கறையானுடன் கலவியை முடித்தபின்பு இராணிக்கரையானின் அடிவயிறு வளரத் தொடங்கிவிடும். அடிவயிறு சுமார் 15 செ.மீ வரை வளரும். புற்றின் ஆரம்ப காலத்தில் இராணி இடத்தை தேர்ந்தெடுத்து சிறுகுழிப் பறித்து முட்டைகள் இடும். இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும்.

ஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்க்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும்.முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும்



ஆண்கறையான்கள்

சில சிற்றினங்களில் மட்டுமே ஆண் கறையான் இறந்தாலும் மற்றொரு ஆண் கறையான் இராணிக்கறையானுடன் கலவி புரிந்து இனப்பெருக்கம்செய்யும். இராணிக்கறையானின் முட்டைகளிலிருந்து பொரிந்து வரும் குஞ்சுகளை ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் பணியினை பணிக்கறையான்கள் செய்கிறது. ஆண் கறையான்கள் பெரும்பாலும் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதில்லை. அங்ஙனம் இருந்தால் அவை இறந்து விடும்.


1976ஆம் ஆண்டு இடான்சானியா நாட்டின் 5 மீட்டர்களுள்ள கறையான் புற்றின் நிழற்படம்


வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவை பிறவியிலேயே மலடுகள் அல்ல. இராணிக்கரையான் தன் உடலிலிருந்து சுரக்கும், ஒருவித சுரப்பி்னை உண்பதால், இம்மலட்டுத்தன்மை அவைகளிலே ஏற்படுகிறது.



வாகைக்கறையான்

பருத்தத் தலையுடன், அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும்.இவை பகைவர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டி விடும்.

துப்பிக்கறையான் - இவை பகைவர்களின் மீது, துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டி விடும்.



பணிக்கரையான்கள்
தங்கள் உமிழ்நீரையும் மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். அனைவருக்கும் உணவு கொடுக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இறந்து விடும்

கறையான்களின் உணவில் பெரும்பாலும் செல்லுலோசு உள்ளது.தாவரங்களிலுள்ள செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி கரையான்களுக்கு இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் புரோட்டோசோவாக்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் கைம்மாறாக Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும்

மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி


ணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான்.


கரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம் தோன்றுவதற்கு முன். அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை.


உலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாகும்.




தற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி தலை நெஞ்சு வயிறு எனும் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.



இவற்றிற்கு மூன்று சோடி கால்களும்ஒரு சோடி உணர்கொம்பும் உண்டு.கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாது. இரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறமுடையது! இவற்றால் தலை துண்டிக்கப் பட்டாலும் சுவாசிக்க முடியும்!!(சில கரப்பான் பூச்சிகளால் வளி இல்லாமல் 45 நிமிடங்கள் வழமுடியும்.)



உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனம் Giant burrowing cockroachஆகும். இது ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது.இது 9 சென்ரிமீட்டர் வரை வளரக்கூடியது. இதன் நிறை 30 கிராமை விட அதிகமாக இருக்கும்.

இந்த கரப்பான் நிலத்தை 3 அடி(1 மீட்டர்) அழத்திற்கு தோண்டி வசிக்கின்றது.இதன் காரணமாகவே இதற்கு Giant burrowing cockroach என பெயர் வந்தது. (burrow-பூமியில் வளை தோண்டு). இதற்கு சிறகுகள் கிடையாது.

கரப்பான் பூச்சியின் உணர்கொம்புகள் சூழலை அறிய உதவுகின்றது. இரவில்(இருட்டில்) உணவு வேட்டையை செய்யும். இவை எந்த பாகுபாடுமில்லாமல் எல்லாவிதமான உணவையும் வெட்டியும் அரைத்தும் உண்கின்றன. அப்படி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் காகிதம் சவர்க்காரம் போன்றவை கூட உணவாகும். இதற்கு இதன் வலிமை வாய்ந்த தாடைகள் உதவி செய்கின்றன. சில சமயம் உணவே கிடைக்காமல் கரப்பான் பூச்சியினால் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழ முடியும்!


ஆஸ்துமா ஆபத்து கரப்பான் பூச்சிகளால் ?

உங்கள் வீடுகளில் அதிக அளவில் கரப்பான் பூச்சிகள், எலிகள் உள்ளதா? உடனடியாக அவற்றை ஒழிக்க முயற்சி எடுங்கள். இல்லாவிட்டால், அவற்றின் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வீசிங் எனப்படும் மூச்சுத்திணறல், கடுமையான காய்ச்சல், எக்ஸிமா எனப்படும் ஒவ்வாமை நோய் போன்றவை 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பரவுவதற்கு கரப்பான் பூச்சிகளும், எலிகள் மூலம் வெளிப்படும் ஒருவகை புரோட்டீனும் காரணமாக அமைவதாக கொலம்பியா குழந்தைகள் சுற்றுப்புற சூழல் சுகாதார மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கரப்பான் பூச்சிகள், எலிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், உடல்நிலையில் ஏற்படும் அறிகுறிகள் பற்றியும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டனர்.
வீட்டிற்குள் உருவாகும் ஒவ்வாமையில் கரப்பான் பூச்சிகளும், எலிகளும் முக்கியப் பங்கு வகிப்பது கண்டறியப்பட்டது. அதிலும் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு அவை காரணமாக இருப்பது தெரிய வந்தது.

கரப்பான் பூச்சியின் மூளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆற்றல்


கரப்பான் பூச்சியும் வெட்டுக்கிளியும் மனிதரின் உயிர் காக்கும் மருத்துவர்களாக மாறும் நாள் தொலையில் இல்லை என இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் லீ என்பவரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பூச்சிகளின் மூளையில் காணப்படுகின்ற வேதிக் கூறுகள் பல தீங்குதரும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



கரப்பான் பூச்சி (வட்டார வழக்கில் பாச்சா, பாச்சை) அழுக்கு நிறைந்த சூழலிலும் உயிர் வாழும் தன்மையது. அங்கே தொற்றுநோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும். இருப்பினும் அந்நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி கரப்பான் பூச்சியின் மூளைப்பகுதியில் காணப்படும் வேதிக் கூறுகளுக்கு உள்ளது. கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கப்படுவது வியப்பைத் தருகிறது என்று அறிவியலார் கருதுகின்றனர். நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டால் சாவு உறுதி. ஆனால் கரப்பான் பூச்சியிடம் நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் மிகுதியாகவே உள்ளது.
கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% திறம் கொண்டவையாக உளவாம்.


இக்கண்டுபிடிப்பின் விளைவாக மருத்துவத் துறை பயன்பெறும் என்றாலும் அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

தேள்கள் பற்றிய அதிசய தகவல்கள்


தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன

இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.




  • தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை
தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.
  • தேள் கடிக்கு முதலுதவி

கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.

தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.

இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி
நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.

கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.

முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.

இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய
சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.

பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.

இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.
மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ்.
இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.

உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை


உலகிலேயே மிகப் பெரிய சிலந்தி வலையை விஞ்ஞானிகள் மடகாஸ்கர் தீவில் கண்டுபிடித்துள்ளனர். மடகாஸ்கரில் உள்ள ஒரு ஆற்றின் மேல் பரந்து விரிந்து காணப்படுகிறது இந்த சிலந்தி வலை.
இதுவரை அறியப்படாத ஒரு வகை பொருளால் இந்த வலை பின்னப்பட்டுள்ளது. மிகவும் வலுவாகவும் உறுதியாகவும் காணப்படுகிறது. டார்வினின் ஸ்பார்க் ஸ்பைடர் என்ற புதிய வகை சிலந்தி இந்த உயிரியல் பொருளை வெளிப்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது. ஒரே சிலந்தியால் பின்னப்பட்ட உலகின் மிகப் பெரிய வலை என்ற பெயரையும் இது பெற்றுள்ளது.







இந்த வலையில் சிக்கும் சிறிய வகை ஈக்கள் மற்றும் பூச்சிகளை மட்டுமே இந்த சிலந்தி உண்கிறதாம்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளசிலந்தி வலை 82 அடி,(25மீட்டர் )அகலத்துடன் காணப்படுகிறதுஅதாவது நம்மூரைச் சேர்ந்த பஸ்களின்சைஸில் இது உள்ளது.

வழக்கமாக பெண் சிலந்திகள்தான் வலை பின்னும் வேலையை செய்யும். அதேசயம் ஆண் சிலந்திகள் வளர்ந்து பெரிய ஆள் ஆகி வயதுக்கு வரும் வரை இந்த வேலையைச் செய்யும். அதன் பிறகு நிறுத்தி விடும். அதன் பின்னர் தனது முழு சக்தியையும்இ பெண் சிலந்தியுடன் இனப்பெருக்க 'வேலை'யில் ஈடுபடுவதற்காக சேமித்து வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த இன சிலந்திகள் ஸ்பைடர்மேன் போன்று பெரிய அளவில் பலம் வாய்ந்ததாக இருக்கும். அவை சிறிய ரக பூச்சிகளை தான் உணவாக பயன் படுத்துகிறது. பலம் வாய்ந்த வலைகளை பெண் சிலந்திகள் தான் பின்னுகின்றன என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை


அந்தரத்தில் பறந்துகொண்டே ஓரிடத்தில்


உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை 
Bee Hummingbird
 
சுண்டு ஓசனிச்சிட்டு ஆகும்.ஓசனிச்சிட்டுகள் என்னும் மிகச் சிறிய பறவைகள் சிறகடித்துக் கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை. இவ்வினப் பறவைகள் வட தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இப்பேரினத்தில் 320 வகையான ஓசனிச்சிட்டு வகைகள் உள்ளன.கியூபாவில் வாழும் ஓசனிச்சிட்டுகள் ஆகிய இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளது



கியூபாவில் வாழும் சுண்டு ஓசனிச்சிட்டுகள் ஆகிய இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளது.















மயில்கழுத்து நிறக் கன்ன ஓசனிச்சிட்டு

இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று இது அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் 'உசுஉசு ' என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர்.ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள். அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல் இது பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது; நெட்டாக நேர் செங்குத்தாக மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது. இப்பறவைகளின் உணவில் பூந்தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. உடல் வளர்ச்சிக்குத்தேவையான புரதச் சத்து பூச்சிகளை உண்பதால் பெறுகின்றன.

ஓசினிச்சிட்டின் குஞ்சுகள்

உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகச் சிறிய கூடு ஓசனிச்சிட்டு பறவையின் கூடாகும். இதனுடைய கூட்டின் ஆழம் மிகக்குடியது 3 செ.மீ விட்டமுடையது. இது மே -யூன் காலப்பகுதியில் குஞ்சு பொரிக்கும் காலமாகும்.

சிறிய பறவைகளாகிய ஓசனிச்சிட்டுகளுக்கு நீளமான மெல்லிய குத்தூசி போன்ற அலகுகள் உள்ளன. நீளமான மெல்லிய அலகுகள் இருப்பது இப்பறவை இனத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இப்பறவையின் பிளவுபட்ட இரட்டை நாக்கு அலகுகளுக்கு வெளியேயும் நீண்டு பூவின் அடியே இருந்து பூந்தேன் உண்ண வசதியாக படிவளர்ச்சி அடைந்துள்ளது. நாக்கு குழல்போல் உருண்டு தேனுண்ன ஏதுவாக அமைந்துள்ளது. ஓசனிச்சிட்டுகளின் கீழ் அலகு பூச்சிகளைப் பிடிக்க வசதியாக விரிந்து கொடுக்கக்கூடியது.

தேனீயுடன் அளவை ஒப்பிடுமாறு நிற்கும் ஓசனிச்சிட்டு

பெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் கண்ணைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. ஆண்-பெண் பறவைகளின் தோற்றங்கள் வெகுவாக மாறுதலாக இருக்கும் ஈருருப் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான நிறம் கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.

ஓசனிச்சிட்டுகள் இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் இனியம் (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன. பூந்தேனில் இனியம் இருந்த பொழுதும் பறவைகளுக்குத் தேவையான புரதச் சத்து அமினோக் காடிகள் உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்) கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற்காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும் சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது இப்பறவை. ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான பூந்தூள் சேர்க்கை (மகரந்த சேர்க்கை) நிகழ்கின்றது

இயற்கையின் படைப்புக்களில் ஆச்சரியம் மிக்க உயிரினங்கள்!


இயற்கையின் படைப்புக்களில் மனிதன் தான் சிறந்தது என்ற கருத்து நிலவுகிறது, உண்மையில் மனிதனை விட சிறப்பான படைப்புகள் ஏராளம்.
அந்த வகையில் நிறம் மாறும் உயிரிங்கள் பற்றியதுதான் இச்செய்தி, தான் வாழும் சூழலுக்கேற்ப நிறத்தை மாற்றி எதிர்களிடமிருந்து தப்பிக்கொள்ளும் அபார திறமை இவ்வகையான உயிரினங்களிடையே காணப்படுகிறது. இதன் மூலம் ஆபத்தான நேரங்களில் உயிரை பாதுகாத்துக்கொள்கின்றன.
இங்கேயுள்ள படங்களில் காணப்படும் உயிரினங்கள் வெவ்வேறு சூழலில் வாழ்பவை,ஒவ்வொரு படத்திற்குள்ளும் ஒரு உயிரினம் இருப்பதையும் அவதானிக்கலாம் இவை சூழலின் நிறத்தோடு அவை ஒத்துப்போகின்றன. இதன் காரணமாகவே இவை நீண்ட நாட்கள் இப்பூமியில் வாழ்கின்றன.


சிலந்தி – விஞ்ஞான உண்மைகள்


சிலந்திகளைப் பார்த்திருக்காத சுட்டிகளே இருக்க முடியாது. உங்கள் வீடுகளை நூலாம் படைகளின் கூடாரமாக்கும் சிலந்திகளும் உண்டு. கடித்து உயிரையே பறித்துவிடும் சிலந்திகளும் உண்டு. சிலந்திகளிலும் ஆயிரம் வகை!
வீட்டுச் சிலந்தி
வீட்டுச் சிலந்திகள் இருள் அடைந்த இடங்களை அதிகம் விரும்பும். வீட்டுக் கூரையிலோ, ஜன்னல் பக்கமோ வலை கட்டும். நிறைய பூச்சிகளைப் பிடிக்க முடியும் என்பதால் இந்த இடங்களை தேர்ந்தெடுக்கிறது.
வலையைக் கட்டி முடித்ததும் ஓர் ஓரமாக அமர்ந்து பூச்சிகள் வருவதற்காகக் காத்திருக்கும்.
பெரிய பூச்சிகள் மாட்டினால் அவற்றின் மேல் அதிக அளவு நூலைப்போட்டு பிடித்துக்கொள்ளும்.

பிளாக் விடோ

கறுப்புக் கண்ணாடி போல் உடலுள்ள சிலந்தி இது. ஆண் சிலந்திக்கும் பெண் சிலந்திக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. பெண் சிலந்திகள் ஆண் சிலந்திகளை விடச் சற்றுப் பெரியவை.
பெண் சிலந்திகளின் வயிற்றுப்பகுதியில் ஒரு சிவப்பு வட்டம் இருக்கும். ஆண் சிலந்திகளுக்கு இருபுறமும் சிவப்பு மற்றும் வெள்ளையில் கோடுகள் காணப்படும்.
பொதுவாக இவை தனிமை விரும்பிகள். வலையில் சின்ன அதிர்வு ஏற்பட்டாலும் ஓரமாக பதுங்கிக்கொள்ளும். இந்த வகை சிலந்திகளின் கடி விஷமுள்ளது. ஆனால், ஆரோக்கியமானவர்களை ஒன்றும் செய்யாது. பெண் சிலந்திதான் கடிக்கும். ஆண் கடிக்காது.
தோட்டச் சிலந்தி
தோட்டங்களிலும் புல்வெளிகளிலும் வாழும். கறுப்பு மற்றும் மஞ்சள் கோடுகளுடன் காணப்படும்.
நடுப்பகுதியில் சற்று அதிக வலிமையாக இருக்கும்படி வலை கட்டும். அந்த இடத்தில் பெண் சிலந்தி அமர்ந்து கொள்ளும். ஆண் சிலந்தி பெண் சிலந்தியைச் சுற்றி வலையை மேலும் பெரிதாக்கிக்கொண்டே போகும்.
தங்கக்கம்பி சிலந்தி
இதைப் ‘பூச்சிலந்தி’ என்றும் சொல்வார்கள். மஞ்சள் உடலில் சிவப்பு தீற்றல்கள் இருக்கும். கண்களுக்கு இடையேயும் சிவப்பு வண்ணம் காணப்படும். இவை புல்வெளி, வயல், தோட்டங்களில் வெள்ளை, மஞ்சள் மலர்களின் மேல் மலர்ந்திருக்கும்.
இவை பெரிய மலர்களின் ஓரத்தில் அமர்ந்திருக்கும். பூவிலுள்ள தேனைக் குடிக்க பூச்சிகள் வந்ததும் பிடித்து அவற்றின் உடலுக்குள் விஷத்தை ஏற்றும். இந்த விஷம் பூச்சியின் உடலில் உள்ள பாகங்கள் அனைத்தையும் உருக்கி திரவமாக மாற்றும். அதன் பிறகு அந்த திரவத்தை அப்படியே உறிஞ்சிக் குடிக்கும்.
பச்சைச் சிலந்தி
இவை வயல்களிலும் காடுகளிலும் காணப்படும். புதர்களிலும் சின்னச் செடிகளிலும் கூட இருக்கும்.
வேகமாக ஓடக்கூடிய இச்சிலந்திகள் பூச்சிகளை பூனை போல் பதுங்கிச்சென்று பிடித்து உண்ணும்.
கரோலினா உல்ஃப் சிலந்தி
இவை வயல்களில் காணப்படும். தரையில் கிடக்கும் பூச்சிகளை இரவில் வேட்டையாடும்.
பாலைவனச் சிலந்தி
சிலந்திகளுள் மிகப்பெரியவை இவை. மணலுக்கடியில் புதைகுழிகள் கட்டி வாழும்.
இரவில் குழியின் வாசலருகே குட்டிப்பூச்சிகளுக்காக காத்திருந்து பிடிக்கும். மற்ற நேரங்களில் வெளியே வராது.
ஆண் சிலந்திகள் 10-11 ஆண்டுகள் வாழும். பெண் சிலந்திகள் 25 ஆண்டுகள் வரை வாழும்.
********************************************************************
நன்றி:- சு.வி


பாம்புகள் பற்றிய தகவல்கள்


சென்னை மற்றும் புறநகரில் கடந்த சில ஆண்டுகளாக பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால்மக்களுக்கு பாம்புகள் குறித்து பய உணர்ச்சி அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஆண்டிற்கு 300நல்லப் பாம்புகள், 500 சாரைப் பாம்புகள் மற்றும் இதர பாம்புகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை வனத்துறையினரால் பிடித்து அடர்ந்து காப்புக் காடுகளில் விடப்படுகின்றன.இருப்பினும் பாம்புகள் பற்றிய அச்சம் மக்களிடம் குறையவில்லை.
உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில்,இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்கு மட்டுமே விஷமுள்ளது. மற்றவை விஷமற்றது.

அவைகள் நல்லபாம்புகட்டுவிரியன்கண்ணாடிவிரியன் மற்றும்சுருட்டை விரியன்.

நல்லபாம்பு: பழுப்புமஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நல்ல பாம்பு படம் எடுக்கும் தன்மை கொண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வரை வளரும். இவைகள் எலி வலை மற்றும் கரையான் புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும்சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணம் விளைவிக்கக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் இவைகள் பரவலாககாணப்படுகின்றன.

கட்டுவிரியன்: இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்றுஎலி வலைகற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் குறைந்த அளவே காணப்படுகிறது.

கண்ணாடி விரியன்: இரவு நேரத்தில் காணப்படக்கூடிய இந்த பாம்பின் தலைமுக்கோண வடிவில் இருக்கும். கண்ணின் பாவை நெடு நீள வடிவத்திலிருக்கும். பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பாம்புகளின் மேல்புறம் பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட வடிவம் காணப்படும். இது 1.80 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. முட்புதர் மற்றும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மிக நீளமான விஷப் பற்களை கொண்ட இந்த பாம்பிம் விஷம் இதயத் திசுக்களையும்ரத்த ஓட்ட அமைப்பினையும் தாக்கி மரணம் விளைவிக்க கூடியது. இந்த வகை பாம்பும் சென்னை புறநகரில்மிகக்குறைந்த அளவே காணப்படுகின்றன.

சுருட்டை விரியன்: இந்த பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக காணப்படும்.வெளிர் மற்றும் அடர் பழுப்பு செந்நிறம்,சாம்பல் அல்லது மணல் நிறத்துடன் உடலின் மேற்புறத்தில் வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும். இதன் தலையின் மேற்புறம் அம்புவடிவம் காணப்படும். 50 செ.மீ.நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 80 செ.மீ.நீளம் வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த நிலப்பரப்புகள் மற்றும் அதிக மழை பெய்யும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் இந்த பாம்புகள் மரப்பட்டைகள்கற்களுக்கு இடையிலும் கற்றாழை போன்ற செடிகள் அடியிலும் காணப்படும். இந்த பாம்பின் விஷம் ரத்த மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தென்சென்னை கடற்கரை பகுதிகளில் இந்த வகை பாம்புகள் ஓரளவு காணப்படுகின்றன.

தங்கத்தை விட மதிப்பானது விஷம்: வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோஅடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்புவிஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம் ரூபாய்கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூபாய்கண்ணாடி விரியன் விஷம் 40 ஆயிரம் ரூபாய்சுருட்டை விரியன் 45 ஆயிரம் ரூபாய் என விற்பனைசெய்யப்படுகின்றன.

விஷமற்ற பாம்புகள்: சென்னை மற்றும் புறநகரில் விஷமற்ற பாம்புகளான சாரைப்பாம்புநீர்சாரை அதிகம் காணப்படுகின்றன. இது தவிர வெள்ளிக்கோல் வரையன்பச்சை பாம்புகொம்பேறி மூக்கன்மண்ணுளி பாம்புபவழப்பாம்புஅழகு பாம்புபிரைடல் பாம்புநீர்காத்தான்குட்டிபசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்புசிறு பாம்பு போன்றவை சென்னை நகரில் சிறிதளவே காணப்படுகின்றன.

பாம்புகள் பற்றிய தகவல்கள்: மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால்கண்ணாடிவிரியன்பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது. பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவேநாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன.

பாம்பு கடி முதலுதவி: பாம்புகளில் நச்சு சுரப்பிஉமிழ்நீர்சுரப்பியிலிருந்து தோன்றியதாகும். விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப் பாம்பு கடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவேபாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம்தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும். பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

விஷமுள்ளவிஷமற்ற பாம்புகள் கண்டறிவது எப்படி:

* பாம்பின் வால் குறுக்கு வாக்கில் தட்டையாக அமைந்து இறுதியில் அகன்று இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு வகையாகும்.

* பாம்பின் வால் பகுதி உருளை வடிவில் அமைந்துவயிற்று புற செதில்கள் விரிந்து காணப்பட்டுதலையில் சிறு சிறு செதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன் பாம்பு வகைகள்.

* கண்ணுக்கும்மூக்கு துவாரத்திற்கும் இடையே சிறு குழி காணப்பட்டால் அது விஷமுள்ள குழிவிரியன் வகையாகும்.

* பாம்பின் முதுகின் நடுவில் உள்ள செதில்கள் அறுங்கோண வடிவில் அமைந்துபிற செதில்களை விட பெரியதாக இருந்துகீழ் உதட்டு செதில் பெரியதாக இருந்தால் விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சேர்ந்ததாகும்.

* வயிற்றுபுறம் விரிந்து காணப்படாமல் இருந்தால் அது விஷமற்ற பாம்புகளாகும்.

* தலைப் பகுதியில் பெரிய கவசத்தால் தகடுகள் அமைந்து சாதாரணமாக காணப்பட்டால் அவைகள் விஷமற்றவைகள்.

 நன்றி  DINAMALAR   

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு.!


சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா?

ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல.

சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் ,

madulai
மாதுளை

வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது.

banana
வாழைப் பழம்


சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது முதலில் எளிதாக ஜீரணமாவது இந்தப் பழம்தான். இதனால் உணவுகள் முழுவதும் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் வயிற்றிலுள்ள ஜீரணமாக பயன்படும் அமிலங்களுடன் கலந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்றுள்ள உணவு கெட்டுப்போகும். எனவேதான் சாப்பாட்டிற்கு பின்பு பழம் சாப்பிடாமல் முன்பு சாப்பிடும்போது அதனுடைய பலன் அதிகம் நம்மை சேருகிறது.


grapes
திராட்சை பழங்கள்


அதேபோல பழத்தை அப்படியே சாப்பிடுவதால் முழுமையான நார்ச்சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். ஜீஸ்(Juice) செய்தோ, வேறுவகைகளிலோ சாப்பிடும்போது முழுவதுமாக பழத்திலுள்ள நார்ச்சத்தானது நமக்கு கிடைக்காமல் போகும்.


guava
கொய்யாப் பழங்கள்



சிறு துரும்பும் பல் குத்த உதவுவதுபோல இந்த சின்ன விஷயங்களிலும் நாம் கவனம் எடுக்கும்போது நமது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. நீண்ட ஆயுட்காலத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

Orange Fruit
ஆரஞ்சு


பழங்கள் நமது உடல்நலத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நோய்வாய்ப் படும் காலங்களில் பழமே மிகவும் பிரதான உணவாக இருக்கிறது. மருத்துவர்கள் இக்காலங்களில் பரிந்துரை செய்வது பழங்கள் தான்.

ஆரோக்கியம் தரும் சில அற்புத பழங்களின் படங்கள்:

amla
நெல்லிக் கனிகள்

star fruit
நட்சத்திர பழங்கள்

naval palam
நாவல் பழங்கள்

tomatoes
தக்காளிப் பழங்கள்


apple fruits
ஆப்பிள் பழங்கள்

`


papaya fruit
பப்பாளிப் பழம்


Holy Spirit Fruit
செர்ரி பழங்கள்
குறிப்பு: பதிவில் குறிப்பிட்டுள்ள பழம் வாழைப்பழம். நாம் அன்றாட விருந்துகளில் பயன்படுத்தும் பழமாகையால், குறிப்பாக விருந்தில் வாழைப்பழம் வைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளதாலும் சாப்பிட்ட பிறகே பலரும் பழத்தை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதைத் தவிர்க்கவே இப்பதிவு.. பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாம். நன்றி.!

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
மாநில விலங்கு: மிதுன்


மிதுன் - மாநில விலங்கு - அருணாசல பிரதேசம்


மாநிலப் பறவை: வேலாம்பல்(Great Hornbill)


bird of arunachala pradesh
ஆம்பல் - மாநில பறவை - அருணாசலப் பிரதேசம்


மாநில பறைவை - அருணாசல பிரதேசம்


மாநிலப் பூ:


Orchid flowers
மாநில பூ - அருணாசல பிரதேசம்
Orchid flowers
மாநில பூ - அருணாசலப் பிரதேசம்

அமைவிடம்: மேற்கில் பூடான், வடக்கு மற்றும் வட கிழக்கில் திபெத் மற்றும் சீனா, கிழக்கில் பர்மா தெற்கில் அசாம்.

வரலாறு: அருணாசல பிரதேசத்தின் நவீன வரலாறு 1926, பிப்ரவரி 24-இல் கையெழுத்தான யந்தோவா ஒப்பந்ததின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பிரிட்டீஷ் அரசிலிருந்து துவங்குகிறது. 1962-க்கு முன்னால் இது நார்த் ஈஸ்ட் ஃபிரான்டியர் ஏஜன்சியில் (NEFA) உட்பட்டிருந்தது.

1972 , ஜனவரி 20-இல் இது அருணாசல் பிரதேசம் என்ற பெயரில் மத்திய ஆட்சிப் பகுதியாக மாறியது. 1987 இல் 'ஸ்டேட் ஆப் அருணாசல பிரதேசம்' மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. (55-ஆம் அரசியல் சட்டத் திருத்தம்)

1987, பிப்ரவரி 20-இல் இந்தியாவின் இருப்பத்தி நான்காம் மாநிலமானது. 

பொருளாதாரம்: மக்களின் முக்கிய பொருளாதார மூலதனம் விவசாயமே. மொத்த மக்கள் தொகையில் சுமார் 80% பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை, லிச்சி, ஆப்பிள், பிளம், பீச். செர்ரி போன்ற பழவகைகள் பெருமளவில் விளைகின்றன. உருளைக்கிழங்கு முக்கியச் சாகுபடிப் பயிர். சுற்றுலா, மரத்தடிகளை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள், கனிமச் சுரங்கங்கள், பழப்பபதினீடு, நெய்தல், கூடை பின்னல் மற்றும் கம்பளத் தயாரிப்பு போன்ற குடிசைத் தொழில்கள்.

முக்கிய ஆறுகள்: பிரம்மபுத்திரா, லோஹித், ஸபல்ஸிரி.

முக்கிய நகரங்கள்: இடாநகர், பசிக்காட், பீசு, தபோரிஜோ, 

முக்கிய விமான நிலையங்கள்: அலோங், தபோரிஜோ, பசிக்காட், தேஜூ, ஸைரோ.

மாவட்டங்கள் - 16: மேற்கு காமெங், கிழக்கு காமெங், கிழக்கு சியாங், கீழ் சுபன்சிரி, சங்லாங், டிபங் பள்ளத்தாக்கு, தவாங், திரப், பாப்பும் பாரே, மேற்கு சியாங், கீழ் டிபாங் பள்ளத்தாக்கு, குருங்மே, அஞ்சால், மேல் சுபன்சிரி, லோஹித், மேல் சியாங்.

முக்கிய இடங்கள்

தவாங்: புத்தத் துறவிகள் மடம், மோண்பா வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் உள்ளனர். இங்குள்ள கோல்டன் நங்கியேல் லாத்ஸே என்னும் புத்தவிகாரமே இந்தியாவில் மிகப் பெரிய புத்தவிகார்.

பரசுராம் குண்ட்: லோஹித் மாவட்டத்தில் உள்ளது. ஜனவரி மாதம் நடைபெறும் பரசுராம மேளா வெகு பிரபலமானது.

பிஸ்மக் நகர்: ஈதுமிஷ்மிஸ் இனத்தவரின் சமய மையம். தீபங்வாலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மாலிநிதான்: புராதான ஆலையங்களின் சிதைவுகள் இங்கே காணப்படுகின்றன.

இடாநகர்: அருணாசலின் தலைநகரம். பாப்பும் பர்ரே மாவட்டத்தில் அமைந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை இங்குள்ளது.

போம்திலா: கடல்மட்டத்திலிருந்து 800 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. கண் கவரும் ஆப்பிள் தோட்டங்கள் மிகுந்தது.

apple garden_Arunachala Pradesh
ஆப்பிள் தோட்டம் - அருணாசல பிரதேசம்


கலாச்சாரம்: பழங்குடி மக்களின் பல்வேறு வகையான நாட்டுப்புற நடன வடிவங்கள் (ரோப்பி, அஜி லாமு, ஹிரி), மூங்கில் மற்றும் பிரம்பு கலைப்பொருட்கள், மண் பாண்டம் செய்தல், கம்பளம் நெய்தல், மர வேலைப்பாடுகள் போன்றவற்றிற்கு பெயர் பெற்றது. கைத்தறி மாநில கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

முக்கிய விழாக்கள்: நோக்கடே இனத்தவரகளின் 'சாலோ லோகூ', மலையின மக்களின் 'புரிபூட்டு' போன்றவை முக்கிய விழாக்கள்.

இருப்பிடமும் சிறப்புகளும்:

  • உதய சூரியனின் நாடு எனப்படும் இந்திய மாநிலம்.
  • இந்தியாவின் கிழக்கு முனையிலுள்ள மாநிலம்
  • இந்திய மாநிலங்களிலேயே மிக அதிகம் மொழிகள் பேசப்படும் மாநிலம்.
  • வட கிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய மாநிலம்.
  • இந்தியாவின் மிகக் குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாநிலம் (ஒரு ச.கி.மீ.க்கு 13 பேர் மட்டுமே உள்ளனர்)
  • இந்தியாவின் மிகப் பெரிய புத்த மடாலயமான தவாங் அருணாசலப் பிரதேசத்தில்தான் அமைந்துள்ளது.
  • இந்தியாவில் காணப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்க்கிட்களில் 600-க்கும் மேற்பட்ட இனங்கள் அருணாசலில் உள்ளன. 
  • இதனால் இது 'ஆர்க்கிட்டுகளின் சொர்க்கம்' என சிறப்பிக்கப்படுகிறது.
உங்களுக்காக ஒரு சில ஆர்க்கிட் பூக்கள்..

Orchid flowers
ஆர்கிட் பூக்கள்

Orchid flowers
ஆர்கிட் பூக்கள்
Orchid flowers
ஆர்கிட் பூக்கள்
Orchid flowers
ஆர்கிட் பூக்கள்

Orchid flowers
ஆர்கிட் பூக்கள்


அருணாசலப் பிரதேசத்தின் எல்லை பற்றி இந்தியா சீனா இடையே பலமுறை மோதல் நிகழ்ந்துள்ளது. இந்தச் சிக்கல் இன்னமும் முடிவு பெறவில்லை என்பது வருந்ததக்க செய்தி.

www.thangampalani.com thanks 






ஒளி உமிழும் ஓர் அதிசய உயிரினம்!



fire flies
இரவில் ஒளிரும் மின்மினிப்பூச்சி
இயற்கையின் அதிசயங்கள் தான் எத்தனை எத்தனை? விந்தைமிக்க உயிரினங்களின் இயல்புகளை அறியும்போது நமக்கே சில வேளைகளையும் ஆச்சர்யத்தையும் அற்புத உணர்வையும் விளைவிக்கிறது அல்லவா? அந்த வகையில் இயற்கையில் ஒளி உமிழும் உடலமைப்பைப் பெற்ற இந்த மின்மினி பூச்சியும் சேருகிறது. பூச்சி வகைகளில் இது முற்றிலும் மாறுப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது. இரவில் ஒளியை உமிழும்(ஒளிரும்) மின்மினிப் பூச்சிக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும்.? அது எப்படி ஒளிர்கிறது? நம் வீட்டில் ஒளிரும் மின்விளக்குகள் மின்சாரம் கொண்டுதானே ஒளிர்கிறது!. அப்படியானால் மின்மினிக்கும் மின்சாரம் தேவையா? தானே அந்த மின்சாரத்தை தயாரிக்கிறதா? எப்படி இப்படியொரு ஒளி உமிழும் அதியம் ஏற்படுகிறது? இத்தனை கேள்விகளுக்கும் விடையளிக்கிறது இந்த பதிவு. இறுதியில் மின்மினிப் பற்றிய காணொளிகளும் இடம்பெற்றுள்ளது. இனி பதிவைப் பார்ப்போம்.

மின்மினிப்பூச்சிகளைப் பற்றிய சில உண்மைகள்
  • அதாவது மின்மினிப்பூச்சிகள் ஒரு சிக்கலான உயிர்வேதியியல் -Bio Chemical முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
  • இதில் ஒளிரக்கூடிய பொருள் லூசிபெரின்(luciferin) என்ற ஒரு கூட்டுப்பொருள்.
  • லூசிபெரின்(luciferin) பூச்சியிலுள்ள ஒளி உமிழ் உறுப்பில் (Light emitting organ) நிறைந்திருக்கிறது.
  • இந்த லூசிபெரின் ஆனது லூசிபெரஸ் என்ற என்சைமில் (enzyme) உள்ள ஆக்சிஜன், உயிரணுக்களில் நிறைந்துள்ள ATP எனும் வேதியியல் பொருள் , மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.
  • இதில் ஏதேனும் ஒரு பொருள் இல்லாவிடினும் ஒளி ஏற்படாதாம்.
  • மின்மினிப்பூச்சி விட்டு விட்டு ஒளிர்வதற்கு காரணமே, அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (Nerve impulses) விட்டு விட்டு தொடர்பற்று செல்வதால்தானாம்.
  • இந்த ஒளி உமிழ்வின்போது வெப்பம் எதுவும் வெளியிடப்படுவதில்லை.
  • இயற்கையாகவே இந்நிகழ்வு பூச்சியினுள்ளே ஏற்படுகிறது. 
minmini poochi
மின்மினிப் பூச்சி
மின்மினி பூச்சிகளைப் பற்றிய ஒரு சிறிய அலசல்:

மண்ணில் முட்டை வைக்கக்கூடிய தன்மையுடையது பெண் மின்மினிப் பூச்சிகள். 4 வாரங்களில் முட்டையிலிருந்து இளம் புழு வெளியேறிவிடும். வெயில் காலத்திலும், வேனிற்காலத்திலும் உணவினை நன்கு எடுத்துக்கொண்டு வளர்ந்து வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் ஒளிந்திருக்கும்.

உணவு:

இவை தனக்குப் பிடித்தமான நத்தை மற்றும் மண்புழுவை உண்ணும். இது இரையை எடுத்துக்கொள்ளும் விதமே வித்தியாசமாக இருக்கும். முதலில் இரையை மயக்கமடையச் செய்துவிட்டு, தன் முகப்பகுதியில் இருக்கும் கத்திப்போன்ற கொடுக்கை பயன்படுத்துகிறது. கொடுக்கின் மூலம் எதிரியை மயக்கமடைச் செய்யக்கூடிய வேதிப்பொருளை, எதியின் உடலில் செலுத்துவதில் ஒரு தேர்ந்த மருத்துவரின் அணுகுமுறையை கையாள்கிறது.

அதன் பிறகு செரிமான நொதிகள் இரையினுள் செலுத்துகிறது. இதனால் இரையானது ஒரு சில மணி நேரத்தில் கூழ்மமாக மாறிவிடுவதால், அவற்றைச்சுற்றி மின்மினிப் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து கொண்டு தங்களுக்குத் தேவையான உணவை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில் தனது உடலில் அடிவயிற்றுப்பகுயின் முடிவில் விளக்குப் போன்ற வெளிச்சம் உருவாகிறது.

இதன் வெளிச்சத்தன்மையால் ஒரு சில பறவைகள் தனது கூடுகளில் வெளிச்சத்திற்காக பிடித்து வைத்துக்கொள்வதாகவும் தகவல் உண்டு.

காணொளிகளை  தவறாமல் காணுங்கள்.. மின்மினிப் பற்றிய மேலும் பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.

இரவில் மின்னும் மின்மினிப் பூச்சிகள் - காணொளி:

மிக அருகாமையில் மின்மினி பூச்சி ஒளி உமிழுவதை காட்டும் காணொளி இது..




மின் விளக்குக்கும், மின்மினிப் பூச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை அறிவியல் ரீதியாக காட்டும் காணொளி.. 


சாதாரணமாகவே நம்மவர்கள் ஒரு விஷயத்தை ஆழ்ந்து யோசித்து ஆய்பவர்கள். இந்த மின்மினிப்பூச்சி மட்டும் இவர்களுக்கு விதி விலக்கா என்ன? இதோ அவர்களின் மின்மினிப் பூச்சியைப் பற்றி ஆராய்ச்சியும், ஒளிரும் தன்மையை அறியும் சோதனையைக் காட்டும் காணொளி....





மேலும் இரவில் மின்னும் மின்மினிப் பூச்சிகளின் காணொளி ஒரு சில:








கட்டுரையின் உதவி குறிப்புகள் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கபட்டது.காணொளிகள் அனைத்தும் யூடியூப் லிருந்து எடுக்கப்பட்டது. 


மற்றுமொரு பொதுஅறிவுத் தகவலுடன் உங்களைச் சந்திக்கிறேன்.  பதிவைப் பற்றிய தங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.பதிவில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டாலோ, தவறு இருந்தாலோ சுட்டிக்காட்டலாம். நன்றி நண்பர்களே.. !

www.thangampalani.com thanks


காடு கேள்விப்பட்டிருக்கிறோம்! அதென்ன மழைக்காடு ?(What is a Rainforest?)


Add caption
பூமத்திய ரேகையில் இருப்புறமிருக்கும் இருபுறமிருக்கும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் மழை நன்கு பெய்யும் இடங்களில் ஆயிரக்கணக்கான வருடங்களாக வளரந்து அடர்ந்து செழித்திருக்கும் முதுபெரும் கானகங்கள்.
இங்குள்ள நெடிந்துயர்ந்திருக்கும் மரங்கள் இலைகளை உதிர்ப்பதில்லை.. கதிரவன் ஒளிப்படாததால் இருள் கவிந்திருக்கும் இக்காடு.  ஒரு மூன்றடுக்கு மாடி வீடு போல காணப்படுகிறது.

உச்சாணிக் கிளைகளிலும், மத்தியிலுள்ள கொடிகளிலும், கிளைகளிலும், கீழே உள்ள புதர்களிலும் தரையிலும், வெவ்வேறு உயிரனங்கள் வாழ்கின்றன.

சோலை மந்தி (சிங்கவால் குரங்கு) மரத்தின் உச்சியிலேயே இருக்கும். புதர்களில் காட்டுக்கோழி வசிக்கும். கருநாகம் போன்ற ஊர்வன தரையில் நடமாடும்.

இவ்வுலகிலுள்ள எல்லா வாழிடங்களிலும் உயிரினங்கள் - தாவரங்கள், பறவைகள், பாலூட்டிகள், பூச்சிகள், புழுக்கள் நீர்நில வாழ்பவை என - மிக அடர்த்தியாக உள்ள வாழிடம் பல்லுயிரிய சொர்க்கமாக விளங்கும் இம்மழைக் காடுகள்தாம்.

இருக்கும் இடத்திற்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி.. !!
(இவர் புத்திசாலியா? இல்லை சுயநலவாதியா?)

rainforest animal Chameleon
பச்சோந்தி
பச்சை பசேலென இருக்கும் மழைக்காடுகள்.. இங்கு இலையுதர் காலம் என்பதே இல்லை...!!!
அடர்ந்த காட்டின்ஒரு பகுதி
வெளிச்சம் புக முடியாக காட்டில் வாழும் வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி
அடந்த காட்டில் வசிக்கும் வண்ணக்கிளிகள்

பஞ்சவர்ணக் கிளிகள்
இலையில் அப்படி என்னதான் இருக்கிறது...!!

Butterfly
மேற்புறத்தில் ஆரஞ்சு வண்ண நிறமும், கீழ்புறத்தில் பச்சை நிறமும் கொண்ட மழைக்காடுகளில் வாழும் தவளை..


அடந்த மழைக்காடுகளின் ஒரு பகுதி மேலிருந்து படம்பிடிக்கப்பட்டது...


மழைக்காடுகளில் வாழும் பெரும் சிலந்தி ஒன்று தன்னுடைய இரையைப் பிடிக்கும் காட்சி காணொளியாக..







அமேசான் மழைக்காடுகளைப் பற்றிய காணொளி இது. லோட் ஆக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். இதில் வரும் பின்னணி இசையே கொஞ்சம் திகிலை ஏற்படுத்தும்..




மேலும் மழைக்காடுகளைப் பற்றிய அறிய உங்களுக்கு இந்த தளம் உதவக்கூடும்..

நன்றி:YouTubeடாட்காம்.
www.thangampalani.com thanks



சிரிப்பு! (பொது அறிவுத் தகவல்கள்))


(Gk for smile, ATM mechine, internet, credit card, computer Mouse)

வணக்கம் நண்பர்களே. இன்று இந்தப் பதிவினூடாக ஒரு சில பொதுஅறிவு குறுந்தகவல்களைப் பார்க்கப் போகிறோம்.  பொது அறிவுத் தகவல்களுடன், ஒரு சில கற்பனை வரிகளும் கலந்திருக்கும். பதிவிற்குள் செல்வோம்.

குழந்தைகள் ஒரு நாளைக்கு 400 முறை வாய்விட்டு சிரிக்கிறார்கள். ஆனால் பெரியவர்கள் 15 முறைதான் சிரிக்கின்றனர். அதுவும் ஒரு சிலர் பதினைந்து முறை கூட சிரிப்பதில்லை. நம்முடைய முன்னால் பிரதமர் நரசிம்மராவ் மாதிரி. எந்நேரமும் முகத்தை 'உர்' என வைத்துக்கொள்வதில்தான் அவர்களுக்கு விருப்பமாக இருக்கும் போல.

child smiling
குழந்தைகளின் சிரிப்பு



 child smiling photo
குழந்தையின் சிரிப்பு


இந்த சிரிப்பு விஷயத்தில் பெண்களைவிட, ஆண்கள்தான் அதிகமாக சத்தம்போட்டு சிரிக்கிறார்கள். (காரணம் நமது கலாச்சாரம் என்று வைத்துக்கொள்ளலாம். பொண்ணுங்கன்னா குறிப்பிட்ட வயசுக்கு மேல இப்படித்தான் இருக்கணும்னு 'பொத்தி பொத்தி' வளர்க்கிறதால கூட இருக்கலாம். ஆனால் இப்போ அந்த நிலைமை இல்லைன்னு நினைக்கிறேன்.)



அடுத்து, கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பார்கள். அதுமாதிரி ஏதாவது இருந்தால் என்ன? என்று கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த ஏ.டி.எம் (ATM) மிஷினாக இருக்குமோ..?! 


கார்டை உள்ளே செருகி ரகசிய குறியீட்டை இட்டவுடன், பணத்தை பட படவென எண்ணி வெளியே தள்ளிவிடுகிறது. 


சரி. கடவுளை கண்டுபிடித்தவர் யார் என்று கேட்டால் நமக்கு சொல்லத்தெரியாது. ஆனால் இந்த ஏ.டி.எம். மிஷினைக் கண்டுபிடித்தவர் யார்ன்னு சொல்லமுடியும். 
ATM Machine photo
ஏ.டி.எம் இயந்திரம்

அவர் பெயர் ஜான் ஷெப்பர்டு. ஸ்காட்லாந்து. இவர் 1967-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கிக்காக இந்த இயந்திரத்தை உருவாக்கினார். பிறகு மேம்படுத்தப்பட்டு நாம் உபயோகிக்க பணம் கொட்டும் இயந்திரம் வந்தது. (வங்கிக் கணக்கில் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே..)


நாம் அனைவரும் இப்போது இணையத்தளத்தைப் பயன்படுத்துகிறோமே.. அது எப்போது பிறந்தது தெரியுமா? இணையத்தின் பிறந்தநாள் 20.10.1969. (இதுப் பற்றிய விரிவான பதிவொன்றை வரும்நாட்களில் பதிவிடுகிறேன்.)


மனிதர்களாக நாம் ஒரு நாளில் நடக்கும்போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறோம் தெரியுமா? சராசரியாக 18,000 அடிகள். வியப்பாக இருக்கிறதல்லவா? (இது உட்கார்ந்து வேலைசெய்பவர்களுக்கு பொருந்தாது என நினைக்கிறேன். ஹா..ஹா..!)


இது ஒரு வித்தியாசமான தகவல்: பெண்களைவிட ஆண்களுக்கே அதிகமாக வியர்க்கிறது. 40% வியர்வை அதிகம் நம்முடைய ஆண்மக்களுக்கு. (அதனால்தான் ஆண்களுக்கு வியர்வை வாடை அதிமாக அடிக்கிறதோ?)


பல் போனா சொல் போச்சிங்க.. 55 வயதுக்கு மேல் கிட்டதட்ட பாதி பேருக்கு அனைத்து பற்களும் விழுந்துவிடுகிறதாம். (இப்போ எல்லாம் மருத்துவ வசதி கூடுதலாக வந்திடுச்சு. அதனால் நம்மாளுங்க பல்செட்(tooth set) வச்சிக்கிடறாங்க.)


இப்போ நம்மாளுங்க எல்லோரும் ஏதாவது ஒரு வங்கியோட கிரடிட் கார்டு, டெபிட் கார்டு வச்சிக்கிறோம். (கணக்கில் பணம் இருக்கா.. இல்லையாங்கிறது விஷயமில்லை) சரி. இந்த கார்டை முதல் முதலா யார் அறிமுகப்படுத்தினாங்க தெரியுமா? 
debit cards credit cards
டெபிட் கார்ட் மற்றும் கிரடிட் கார்ட்

பிராங்க் மெத்நமாரா என்பவர்தான். 1949 லிலேயே அறிமுகப்படுத்திட்டார்னா பாருங்களேன். நமக்கெல்லாம் மேம்படுத்தப்பட்டு சமீப வருங்களாடாகத்தான் கிடைச்சிருக்கு.


மிக்கி மௌஸ் கார்ட்டூன் படம் பார்த்திருப்போம். இப்போ கூட குழந்தைகள் ரசிச்சு பார்க்ககூடிய ஒன்றாகவே இருக்கு. மிக்கி மௌஸ் (Micy-Mouse)_நமக்கு தேவையில்லைங்க. இங்க சொல்ல வந்தது இதுதான். நாமெல்லாம் தினமும் பயன்படுத்துற கணினியில் இருக்கிற (Mouse) மௌசை சொல்ல வந்தேன். இதைக் கண்டுபிடிச்சவர் டக்ளஸ் ஏங்கல்பார்ட் ன்னு பேரு.வருடம் 1963.

computer Mouse images


இதிலிருக்கிற தகவல் உங்களுக்கோ, உங்க பிள்ளைகளுக்கோ, உங்களோட நண்பர்களுக்கோ பயன்படும்னு நீங்க நினைச்சா.. அவங்களுக்கு பகிர்ந்திடுங்களேன். கீழே இருக்கிற திரட்டிகளிலும் இணைச்சு. ஓட்டுப்போடுங்க. மறுபடியும் இந்த மாதிரியான கொசுறு செய்திகளோட வாரேன்.. நன்றி..!!
www.thangampalani.com thanks




பூச்சியுண்ணும் தாவரங்களின் கொலைவெறி..!!


பொதுவாகவே தாவரங்கள் என்று எடுத்துக்கொண்டால் அவை சைவமாகவே இருக்கிறது. அதன் இயல்புகளும் அப்படியே. எனவேதான் தாவர வகை உணவுகளை சைவம் என்றும், மற்ற வகைகளை அசைவம் என்று நாம் பிரித்திருக்கிறோம்.

இங்கே குறிப்பிட வந்தது. சைவமா? அசைவமா? என்ற உணவு வகையைப் பற்றி அல்ல. ஒரு சில தாவரங்கள் பூச்சிகளை உட்கொண்டு உயிர்வாழ்கின்றன. நம்மில் ஒரு சிலருக்கு இது தெரிந்திருக்கும்.

சோதனைக்காக பயிரிடப்பட்டிருக்கும் பூச்சி உண்ணும் தாவரம் (நெப்பந்திஸ் வகையைச் சார்ந்தது. )


தற்போதைய காலச்சூழ்நிலையில் நானூறுக்கும் மேற்பட்ட இத்தகைய தாவரங்களை கண்டறிந்துள்ளனர். இதில் ஒரு சில மட்டுமே காட்சிப்படங்களாக இங்கு தரவேற்றம்(Upload) செய்யப்பட்டிருக்கிறது.

இத்தகைய தாவரங்கள் தாம் வாழும் நிலங்களில் இவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காததாலும், சில தாது உப்புக்களின் பற்றாக்குறையை போக்கவும் பூச்சிகளை உண்டு, தமக்கு தேவையான சத்துக்களை அதிலிருந்து உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. பிறகு எஞ்சிய கூடுகளை வெளியில் தள்ளிவிடுகிறது.


இது ஒரு இயற்கையின் அதிசய நிகழ்வாக இருக்கிறது.

பூச்சிகள் உண்ணும் தாவரங்களைப் பற்றியே நாம் இதுவரை அறிந்திருக்கிறோம். தற்போது எலிகள், தவளைகள் போன்றவற்றை கபளீகரம் செய்யும் தாவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வகைத்தாவரங்கள் அனைத்தும் தன்னுள் நுண்உணர்வுகளைப் பெற்றுள்ளது. இரையானது தன்மீது ஊர்ந்துசெல்லும்போது இந்நுணர்வின் மூலம் அவற்றை பிடித்துக்கொள்ள தன் உடலிலுள்ள பசைப்போன்ற திரவத்தை சுரக்கின்றன. இதனால் இதன்மீது ஊர்ந்து செல்லும் இரையானது மேலும் ஊர்ந்துசெல்ல முடியாமல் ஒட்டிக்கொள்கிறது.


கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் முன்னால் தாவரவியல் பேராசிரியர் மெக்பெர்சன் என்பார் இத்தாவரங்களைப் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார். தன் ஆராய்ச்சியின் விளைவாகத்தான் மாமிசம் உண்ணும் தாவரங்களும் உண்டும் என்பதை முழுமையாக ஆராய்ந்து பின்னர் உலகுக்கு அறிவித்திருக்கிறார்.



பூச்சி உண்ணும் தாவரங்களின் வகைப்பாட்டு பட்டியல்.
வரிசைஎண் 
குடும்பம் 
பேரினம் 
வகைகள்
1
பிப்ளிடேசியீ
பிப்ளிஸ் 
2


ரோரிடுலா 
1
2
செப்பலோடேசியீ
செப்பலோட்டஸ்
1
3
திரோசிரேசியீ
ஆல்ட்ரோவாண்டா
1


டயோனியா 
1+1


திரோசிரா 
90


திரொசோபில்லம்
2
4
லண்டிபுளோரேசியீ
பிங்குவிக்குலா
40


ஜென்லிசியா 
1


பயோவுலேரியா 
1


யூட்ரிக்குளோரியா
275


பாலிபாம்போலிக்ஸ்
2
5
நெப்பந்தேசியீ
நெப்பந்திசு 
70
6
சாரசீனியேசியீ
டார்லிங்டோனியா
1+1


ஹிலியாம்போரா
3


சாரசீனியா 
6


பூச்சி உண்ணும் தாவரங்கள் - படங்கள்..
(படத்திற்கு தகுந்த ஒரு சில கற்பனை வரிகளும்)

புள்ளி புள்ளியாய் பொட்டுவைத்து விட்ட உன்னுடைய அம்மா இந்த தாவரம் மிக ஆபத்தானது என்று சொல்லி வைக்கவில்லையா? இப்படி வந்து மாட்டிக்கிட்டாயே..? இவங்கெல்லாம் பார்க்கிறதுக்குத்தான் அழகா இருப்பாங்க. ஆனால் பயங்கரமானவங்க..! இனி வர்றவங்களையாவது எச்சரிக்கையா இருக்கச்சொல்லு..!


சீனியைத் தேடி போகவேண்டியதுதானே? இங்கே வந்து விழப்பார்க்கிறாயே! கட்டெறும்பு என்று கூட பார்க்காமல் இவை உன்னை கசக்கிப் பிழிந்துவிடும்..! எச்சரிக்கை!


இவர் தொட்டுப்பார்த்து சோதனை செய்கிறார். குடுவை வடிவ இலை தொட்டவுடன் மூடுமா மூடாதா? என்று..! கையை உள்ளே விட்டால் கையைக்கூட கசக்கிவிடும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்தோ வெளியில் இருந்தே சீண்டிப் பார்க்கிறாரோ?

இத்தகைய ஜாடி வடிவ இலைகள் கொண்ட தாவரங்கள் குடுவை வடிவ இலையின் அடிப்பகுதியில் அதில் விழும்பூச்சிகளை செரிக்க்கூடிய திரவங்களைக் கொண்டுள்ளது. இதில் விழும்பூச்சிகளை செரிக்க இத்திரவம் பயன்படுகிறது. இத்தகைய சீரணித்தலை டாக்டர். J.D.Hooker என்பவர் கண்டறிந்தார்.





அந்த பரிதாபம்.. இங்கே கிடுக்கிப்பிடியில் நீ சிக்குவாய் என்று எண்ணியா இங்கு வந்தாய்? இப்படி ஒரு ஆபத்து இங்கே இருப்பது தெரிந்திருந்தால் நீ நிச்சயம் இங்கு வந்திருக்கமாட்டாய் அல்லவா?


போகாதே..!! போகாதே..!! ஆபத்து.. ஆபத்து..!!!

அட.. உயிர் பயம் உனக்கு இல்லையா! போகாதே என்று சொன்னாலும் நீ கேட்கவா போகிறாய்..!! உன் விதியை நீயே நிர்ணயித்துக்கொள்கிறாய். யார் என்ன செய்ய முடியும்? தாவரம் தானே என்று நீ நினைத்து இறங்கினால் உன்னை ஒரேயடியாக பிடித்துக்கொள்ளும். என்னதான் நீ துள்ளிக்குதித்து வெளியில் வர  நினைத்தாலும் இதன் பசையானது நீ வெளியேறவோ, தாவிக் குதிக்கவோ முடியாதபடி உன்னை செயலிழக்க வைக்கும். கீழே பார் (இறுதியில்)உன் இனத்தவர் ஒருவர் மாட்டிக்கொண்டு முழிக்கும் முழியை..!!



இது கவ்வுதல் முறையில் பூச்சிகளைப் பிடித்து கசக்கி அதிலுள்ள நைட்ரஜன், தாது உப்புக்களைப் பெறும் தாவரம்.


இது கவ்வுதல் முறையில் பூச்சிகளைப் பிடித்து கசக்கி அதிலுள்ள நைட்ரஜன், தாது உப்புக்களைப் பெறும் தாவரம்.



நெப்பந்திஸ் வகையைச் சார்ந்த பூச்சியுண்ணும் தாவரம்.

தெரியாமல் வந்து மாட்டிக்கொண்ட கொசு..(Mosquito)
அட்டேட்டே!. இங்க வந்து மாட்டுவேன்னு நான் கனவுல கூட நினைக்கலியே..!!


ஒட்டுதல் பண்பு கொண்ட மலரின் வழியே ஊர்ந்து செல்ல நினைத்த எறும்பு ஒட்டிக்கொண்டது. இனி.. தப்பிக்க முடியாது..


அழகுக்கு அழகும் ஆயிற்று..! ஆராய்ச்சிக்கு ஆராய்ச்சியும் ஆயிற்று..!



ஆராய்ச்சிக்காக தொட்டியில் வளர்க்கப்பட்டுள்ள பூச்சி உண்ணும் தாவரம்.
இதுவும் ஒரு வகை பூச்சி உண்ணும் தாவரம்


எத்தனை கொலைகள் செய்தாலும், யாருக்கும் அஞ்சாமல் ஒரே இடத்தில் வேர் ஊன்றி வாழும் உனக்கு எத்தனை நெஞ்சழுத்தம்..! 
பூச்சி உண்ணும் தாவரம்

ஆராய்ச்சிக்காக தொட்டிகளில் வளர்க்கப்பட்ட பூச்சியுண்ணும் தாவரம்.

பூச்சியுண்ணும் தாவரம்

எத்தனை அழகு..! அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இதுதானோ?

பூச்சி உண்ணும் தாவரம்

இங்கே பாருங்கள்! சிறிய எலி ஒன்றை 'லபக்' செய்கிறது இத்தாவரம். நெப்பந்திஸ் வகையைச் சார்ந்த இத்தாவரங்கள் சில சமயம் இதோபோன்ற விலங்கினங்களையும் தமது பசைப்போன்ற திரவத்தால் எங்கும் அசையவிடாமல் உணவாக மாற்றிக்கொள்கிறது.  கருஞ்சிவப்பு, பச்சை நிறம் தோய்ந்த இத்தாவரம் '"நேபன்தஸ் அட்டன்பரோகி" என அழைக்கப்படுகிறது. இச்செடியில் இலைகளே இதுபோல மாறி வாய்போன்ற அமைப்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இது நான்கடி உயரம் வரை வளரக்கூடியது. இத்தாவரத்தைப்பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்துகொண்டுள்ளது.


 எத்தனையோ பூச்சிகளை உண்டும் இன்னும் உனக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கவில்லையா? மனிதனைப் போலவே நீயும் ஒரு சுயநலவாதிதான் போலிருக்கிறது. .!பார்ப்பதற்கு அழகழகாய் காட்சி அளிக்கிறாய்.. செய்வதோ மாபாதகச் செயல்..! கேட்டால் எனக்குத் தேவையானதை நானே எடுத்துக்கொள்(ல்)கிறேன் என்கிறாய். நான் யாரையும் தேடிப்போவதில்லை. என்னைத் தேடிவந்தவர்களை மட்டுமே எனக்கு உணவாகப் பயன்படுத்துகிறேன் என்று வேதாந்தம் வேறு பேசுகிறாய்..!!

உன்னைச்சொல்லி குற்றம் நீயும் ஒரு இயற்கையின் படைப்புத்தானே..!!








Insect eating plant
நீரில் வாழும் ஒரு வகை பூச்சி உண்ணும் தாவரம்
பதிவைப்பற்றிய தங்களது கருத்துகளை எழுதுங்கள்..! பிடித்திருந்தால் திரட்டிகள் மற்றும் சமூகதளங்களில் பகிரவும். பலரையும் பதிவு சென்றடைய உதவுங்கள். நன்றி நண்பர்களே..!!!

www.thangampalani.com/  thanks



புறா..புறா.. அழகுப் புறா..ஆசைப் புறா..! - (புறாக்களின் வகைகள் படங்களுடன்..!!_)



புறாக்கள் என்றாலே அழகுதான்..  வெண்மை நிறம் கொண்ட இத்தகையப் புறாக்களைக் காணும்போது நேரு பறக்கவிட்ட சமாதானப் புறாவைதான் எனக்கு நினைவுக்கு வரும்.

kinds of pigeons

அதுபோல சாம்பல் நிற புறா, காட்டுப்புறா, பந்தயப் புறா இப்படி புறாக்களில்தான் எத்தனை வகை..!!

காட்டுப்புறா காடுகளில் அதிகம் வாழக்கூடியது. யாருக்கும் கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக திரிபவை.. இவைகளைக் கண்டால் எனக்கு சிபி சக்ரவர்த்தி தான் ஞாபகம் வரும்..

கொஞ்சம் இருங்க.. யாரோ கிராஸ் போஸ்ட் செய்றாய்ங்க (கிராஸ் டாக் மாதிரி கிராஸ் போஸ்ட்.. ஹா.ஹா...)

ஒன்னுமில்லீங்க நம்ம தமிழ்பேரண்ட் சம்பத்தான் குறுக்கிட்டுவிட்டார்..

என்ன சம்பத் .. என்ன சொல்ல வர்றீங்க..

ஓ... சிபி சக்ரவர்த்தியைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? ம்.. என்ன..? சின்ன வயசுல படிச்சிருக்கீங்களா?


சாம்பல் நிறப் புறா


சரி. அவர் என்ன செய்தார்னு சொல்லுங்களே பார்ப்போம்..

சிரிக்கபடாது.. உண்மையா சொல்லுங்க.. தெரியுமா? தெரியாதா?

ம். நீங்க சொல்றது சரிதான்.. புறாவை பிடிச்ச வேடனுக்கு அந்தப் புறாவின் எடைக்கு எடை தன்னோட சதையை வெட்டிக் கொடுத்தார்ன்னு படிச்சீங்களா?

யெஸ். நீங்க சொல்றது சரிதான்.. நான் அவரைப்பத்திதான் சொன்னேன்.

சரி. விடுப்பா பதிவை முடிச்சுட்டு வந்துடுறேன்..

ம் எங்க விட்டேன்.. காட்டுப்புறா...

காட்டுப்புறா , கோயில் புறா, மாடப் புறா.. ன்னு நம்ம நாட்டுல நிறையப் புறா இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இனம் வித்தியாசமா இருக்குங்க..

அதுக்குப் பெயர் பச்சைப்புறாவாம் இதுக்கு வேற பேரு மரகதப்புறா.

நான் பார்த்ததில்லை.. நீங்க பார்த்திருக்கீங்களா? இதோ படத்தைப் பாருங்க.. பச்சைப்புறாவைப் பிடிச்சிட்டேன்..(நன்றி விக்கிபீடியா)

Green Dove
Emerald Dove



இந்த பச்சைப் புறாவுக்கு அதிக கிராக்கி இருக்காம்.. பார்க்கிறதுக்கு கிளி மாதிரியே இருக்குமாம். இதனோட இரத்தத்தை நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு குடித்தால் அந்த வியாதி குணமாகிவிடும் என்பது இன்றும் கிராமத்திலுள்ளவர்களின் நம்பிக்கை.. ஆனால் விஞ்ஞானப் பூர்வமாக இது உண்மையா என்பது ஏதும் தகவல் இல்லை.

kinds of pigeons
மரகத புறா - Chalcophaps indica

புறாவிலேயே ஹீரோவா இதைத்தான் சொல்றாங்க.. இது பந்தயப்புறா.. பந்தயங்களில் பறக்கவிடுவாங்க.. பந்தயம்னா சாதாரணம் இல்லீங்க.. இமயத்திலிருந்து பறக்கவிட்டா கன்னியாகுமரி வந்து சேருகிற மாதிரியான தொலைவு வரைக்கும் கூட வைப்பாபாங்களாம்..

என்ன ஒரு ஆச்சர்யம்ன்னா.. இந்த வகைப்புறாக்கள் எங்கு கொண்டுபோய் விட்டாலும் ஆகாயத்தை ஒரு வட்டம் போட்டுட்டு சரியான திசைநோக்கிப் பறக்க ஆரம்பிச்சிடுமாம்..

kinds of pigeons

இந்த வகை புறாக்கள் ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளிலருந்து இறக்குமதி செய்கிறார்களாம்.

இந்த பெல்ஜியம் புறாக்களின் முட்டை விலையே 25000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரைக்கும் போகுமாம்.. (அடேயப்பா..! எனக்கு தலை கிறுகிறுங்கது.. சம்பத் உங்களுக்கு எப்படி இருக்கு..)

பந்தயப் புறாக்கள்(Race Pigoens) எப்படி உருவாக்குகிறார்கள்?

இங்கதான் நம்ம ஆளுங்களோட புத்திசாலித்தனம் இருக்கு. ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புறாக்களோடு நீண்ட தூரம் பறக்கூடிய நம்ம நாட்டுப் புறாக்களோடு கலப்பினம் செய்து புதிய புறாவினத்தை உருவாக்குகிறார்கள்.

இந்த புதிய புறாக்கள் பந்தயங்களில் நீண்ட தூரம் பறக்கும் சக்தி கொண்டவையாம். இந்த பந்தயப் புறாக்களில் "ஹோமர்" என்ற ரகம் பந்தயத்திற்கு ஏற்ற ரகம்னு சொல்றாங்க. இதனுடைய நுட்பத் திறனும் அதிகம்.

kinds of pigeons

இந்த வகைப் புறாக்கள் இல்லாமல்.. நம்மளோட அழகு ரசனை வெளிப்படுத்தற மாதிரி அழகுப் புறாக்களும் இருக்கு..


பேன்சி புறாக்கள்(Fancy Pigeons )

பார்ப்பதற்கு மட்டுமே அழகா இருக்கிற இந்த வகைப்புறாக்கள் பல நிறத்தில் இருந்தாலும் இது ஒரு சோம்பேறி..! (அதாவது என்ன மாதிரி. என்னை வீட்ல 'சோம்பேறி'ன்னு தான் அப்பா கூப்பிடுவார்)

இதுங்களோட பூர்வீகமும் பெல்ஜியம்தான்... இது வீடு, தோட்டம், மாடின்னு.. வீட்டைச் சுற்றியே வரும். வெளியில் கொண்டுபோய் ஒரு நாலு தெரு தள்ளிவிட்டால் கூட வீட்டிற்கு வரத்தெரியாத ஒரு மக்குப் புறா இது.



ஒரு சில வகையான புறாக்களின் படங்கள் கீழே..: 

kinds of pigeons

kinds of pigeons

kinds of pigeons


kinds of pigeons


kinds of pigeons


kinds of pigeons



kinds of pigeons


kinds of pigeons


kinds of pigeons


kinds of pigeons





kinds of pigeons

பதிவு பிடித்திருந்தால் திரட்டிகளில் ஓட்டுப்போட்டு, சமூகதளங்களில் பகிர்ந்து உங்கள்  நண்பர்களுக்கும் தெரிவிக்கலாமே..! நன்றி!

www.thangampalani.com thanks