லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் Beluga
லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம்
வெண்திமிங்கலம்
வடதுருவப்பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு
வகைபாலூட்டி.
இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் (16அடி) நீளம் வரை
வளரக்கூடியது. அனைத்து வகையான கடல் பன்றிகளை (டால்பின்) விடப் பெரியதாகவும்
(மிகப்பெரிய டால்பின்வகைகளை அல்ல) அனைத்து வகையான பற்கொள் கொண்ட திமிங்கிலங்களை விட
சிறியதாக தோற்றம் கொண்டது. பெண்பால் வகையை விட ஆண் வகைகள் பெரியதாக
வளரும். ஆண்
வெள்ளைத் திமிங்கிலங்கள் 1360 கிலோ வரையும் பெண் 900 கிலோ வரை எடை
கொண்டது.பிறந்த
உடன் 1.5 மீட்டர்(5 அடி) நீளமும் 80 கிலோ எடையும் இருக்கும். பொதுவாக பிறக்கும்போது
சாம்பல் நிறத்தில் இருக்கும்.